பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றியும் ஈடுவும் 29, குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென' நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்ருேர்க்(கு) உய்தி யில்லென அறம்பா டிற்றே ஆயிழை கணவ.” என்பது அப் புலவரது பாடலின் ஒரு பகுதியாகும். பசுவின் மடியை அறுத்த பாவம், பெண்டிாது கருப்பத்தைச் சிதைத்த பெரும்பாவம், ஆசிரியர்க்குக் நீங்கிழைத்த அரும்பாவம் போன்ற கொடிய தீவினை களைப் போக்கிக்கொள்ளுதற்குப் பொருந்திய வழிகள் உளவெனப் புகல்வர் ஆன்ருேர் ஆல்ை நிலமே தலைகீழாக மாறினாலும் ஒருவன் செய்த நன்றியை மறந்தவர்க்கு நாகம் உறுதியாகும். அதனின்று தப்புதற்கு வழியே இல்லை என்று அற நூல் அறுதி யிட்டு உரைத்தது என்று அறிவுரை வழங்கினர் ஆலத்துணர்கிழார். சங்க காலப் புலவராகிய ஆலத்துணர்கிழார் காலத் திலேயே அறநூல் என்று தலைக்கொண்டு போற்றிய தனிப் பெருநூல் திருக்குறள் ஒன்றே என்பதை அவர் வாய்மொழியால் கண்டுணரலாம். செய்தி கொன்ருேர்க்(கு) உய்தி யில்லென அறம் பாடிற்றே." என்று வலியுறுத்தும் அப் புலவர், வள்ளுவர் சொல்லமுதத்தை அறம் என்றே குறிப்பிடும் திறம் எண்ணியெண்ணி இன்புறுதற்குரியதாகும். நன்றி மறவேல் என்பது நம் தமிழ் மூதாட்டி யாரின் அமுதமொழி. அவர் இக் கருத்து இளைஞர் உள்ளத்தும் எளிதில் பதியுமாறு இரு சொற்களால்