பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியும் நடுவும் 35 வாய்ந்ததாக இருக்கிறது. அத்தகைய தீங்கிழைக்கும், முன்பு நன்கிழைத்தானே யாது செய்வது? உதவி செய்தவனே எனினும் உயிருக்கே உலைவைக்கும் அவ்உன்மத்தனே வாளா விடுவதா? இவ்வினுக்களுக்கு வள்ளுவர் சொல்லும் விடையினை நோக்குக. கொன்றன்ன இன்னு செயினும் அவர்செய்த ஒன்று நன் றுள்ளக் கெடும்.’ § என்பது அவர் சொல்லமுதம். உதவியைப் பெற்ற வன் உத்தமப் பண்புடையவனெனின் அவ் உதவியின் பயனை உய்த்துணர்ந்து ஒன்று நூருகக் கொண்டு உள்ளத்தே மறவாது போற்றியிருப்பான். அங்ங்ணமாயின் அவ்உதவி செய்தவன் செய்யும் கொலே போன்ற கொடுத்துன்பமும் அத்துணேப் பெரிதாக அவனுல் மதிக்கப்படாது மறக்கப்படும். இதனே விளக்கவந்த காலடியார், சான்ருேர்க்கு நன்றியொன்று செய்தார் பின்றை நாளில் பிழை நூறு செய்தாலும் பேணிப் பொறுப்பர்; கயவர்க்கு எழுநூறு நன்றி செய்துவிட்டு மறதியான் ஒருதீது புரியினும் அவ்எழுநூறும் தீயனவாக மாறிவிடும் என்று கூறியது. ஒரு நன்றி செய்தவர்க்(கு) ஒன்றி யெழுந்த பிழை நூறும் சான்ருேர் பொறுப்பர்-கயவர்க்(கு) எழுநூறு நன்றிசெய்(து) ஒன்று தீ தாயின் எழுநூறும் திதாய் விடும்.' என்பது அங்காலடியார்ப் பாடல். தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய நன்றியைப் பற்றியும் அம்மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவியைப் பற்றியும் வள்ளுவர் தம்நூலுள் சொல்வி