பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

参罗 வள்ளுவர் சொல்லமுதம் கெடுவாக வையா(து) உலகம் நடுவாக தன்றிக்கண் தங்கியான் தாழ்வு." என்பது அவர் சொல்லமுதமாகும். எளிதில் நடுவுநிலை பிறழ்வது, வணிகர்க்கே உள தாகும் என்பதை வள்ளுவர் தெள்ளிதின் உணர்ந்து பேசுகிருர் எந்த நேரத்திலும் நிதியுடன் உறவாடும் விதி அவ்வணிகர்க்கே உண்டு. பணம் பத்தும் செய்யும்’ என்பதற்கு இணங்க, எத்தகைய மறத்தை யும் அஞ்சாது புரியத் தலைப்படுவர் அவ் வணிகர். அதற்குரிய வாய்ப்புக்கள் அவர்பால் நிரம்ப இருப்பதே அவ் வரம்பு மீறும் செயலுக்குக் காரணமாகும். ஆகலின் அவ் வணிகர்க்குத் தக்க இடத்தில் இன்றி யமையாத அறிவுரையினை நன்முக எடுத்தியம்பினர் பெருகாவலர். வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின்.” என்பது அவர் சொல்லமுதமாகும். சிறந்த வாணிகத் திற்குத் தகுந்த இலக்கணம் வகுப்பார்போல இக் குறளே அமைத்தருளினர். பிறர் பொருளையும் கம்பொருளைப்போலப்பேனி யொழுகும் பெருந்தகைமை வணிகர்க்கு அமைந்திட வேண்டிய அரிய பண்பாகும். பிறர் பொருளைத் தம் பொருளாகக் கவர்ந்துகொள்ளும் வணிகரையே பெரும்பாலராகக் காண்கின்ருேம். தம் பொருளைப் போன்று பிறர் பொருளைக் கருதிக் காக்கும் ஆக்க முடைய வணிகர் அரியரே. அத்தகைய அரிய வணி கர்க்கே வாணிகம் வளம்பெற வளர்ந்தோங்கும் என்று வலியுறுத்தினர் வள்ளுவர். அவரது வணிகக் கருத்