பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் திண்மையும் 4.5% யாகக் கடைப்பிடித்து ஒழுகும் உயர்வு இவைகளே பெண்மைக்குரிய பெற்றிமைகளாக வள்ளுவர் வரை யறுத்து ஒரு பாவில் வலியுறுத்துகிருரர். தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.: என்பது அவர் சொல்லமுதமாகும். இங்ஙனம் குறித்த நல்லியல்புகளைக்கொண்ட நங்கையொருத்தியை மிகவும் மேம்பட்ட பொருளாக மதித்தார் திருவள்ளுவர். இத்தகைய மாதர் நல்லாளே மனைவியாக ஒருவன் பெறுவானுயின் அவன் பெரும் பேறு எய்தியவன். அவன் அடையத்தக்க பொருள் களுள் அவளுக்கு ஒப்பான பொருள் பிறிதொன்று இல்லை என்றே பேசினர் நம் பெருகாவலர். త பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்." என்று உறுதிதோன்ற உரைக்கும் அவர் சொல் லமுதப் பாவைப் பாருங்கள். . அப் பெண்மைக்கு உயிர்காடியாக நின்று உயர் வளிப்பது கற்பென்னும் திண்மையாகும். அது மனம் கலங்காத மாண்புறு கிலேமையாகும். கொண்ட கணவனைத் தெய்வமாகக் கொண்டு வணங்கும் உறுதி யான உள்ளமே அக் கற்பென்னும் திண்மையாகும்.

  • கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை." - என்று இலக்கணம் வகுப்பார் தமி ழ்மூதாட்டியார். கணவன் உரையினே மறைமொழியாக மதித்து நடக்கும் மாருத உள்ளமே கற்பென்று அவரால் கட்டுரைக்கப்பட்டது. பெண்டிர்க்கு அழகு, கணவன்