பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வள்ளுவர் சொல்லமுதம் கட்கிணியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையாள் ஊர்தாண் இயல்பினுள்-உட்கி இடன் அறிந்(து) ஊடி இனிதின் உணரும் மடமொழி மாதரான் பெண்.’ என்பது அவரது நாலடிப் பாடல். பெரிதும் வறுமையுற்ருன் ஒருவன் தன் மனைவியுடன் குடத்து நீரைக் காய்ச்சிக் குடித்து வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறன். அத்தகைய வறுமைநிலையில் உறவினர் பலர் அவன் வீடுதேடி வந்துவிட்டனர். அங்ஙனம் வந்தவர் கடல்நீரும் வற்றிப்போமாறு உண்ணவல்ல எண்ணிறந்தோ ராவர். அவர்களேயும் மலர்ந்த முகத்துடன் வரவேற்று இன்சொல்கூறி உபசரிக்கும் கல்லியல்பைக் கடகைக் கொண்டவளே சிறந்த பெண்டாவாள் என்று பேசினர் மற்ருெரு சமணமுனிவர். 'காய் சேயிடத்துக் காட்டும் அன்பே தலையாயது. அத்தகைய தாயன்பு, என்றும் பெண்மைக்கு மாருத இயல்பாக அமையவேண்டும். கணவனுக்குப் பணி புரிவதில் பெண், ஒர் அடியாளைப் போன்று குறிப் பறிந்து நடக்கும் விருப்புடையளாக விளங்கவேண்டும். கணவனுக்கு மகிழ்வூட்டுவதில் மலரும் பொன்னும் போன்ற மணமும் ஒளியும்பெற்று ஒளிரவேண்டும். அகழ்வாரைத் தாங்கும் கிலத்தைப் போன்ற அரிய பொறுமையின் உருவாக அவள் திகழவேண்டும். கணவனுடன் கூடிவாழும் காதல் வாழ்வில் அவனுக்குக் கனிந்த இன்பத்தைத் தருவதில் வேசி யைப் போன்று விளங்கவேண்டும். மனேயற வாழ்வில் கணவனுக்குத் தக்க சமயங்களில் ஆறுதலும் தேறு