பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வள்ளுவர் சொல்லமுதம் இடைக்கற்புக்குப் பூதப்பாண்டியன் தேவியார் பொருத்தமான எடுத்துக் காட்டாவார். கணவராகப் பெற்றேரால் தேர்ந்து உறுதிசெய்யப் பெற்ற கலிப் பகையார் போர்க்களத்தில் உயிர் துறக்க கைம்மை நோன்பு நோற்று இம்பர் மனத்தவமிருந்த திலக வதியார் கடைக்கற்புக்கு ஏற்ற சான்ருவார். கற்பென்னும் திண்மை பூண்ட பெண்களின் பெருமையை இளங்கோவடிகள் தமது காவியத்தில் பற்பல இடங்களில் பொற்புறப் போற்றிப் புகல் கின்றர். அவர் அக்காவியத்தால் வலியுறுத்தும் உண்மைகள் மூன்றனுள் ஒன்று பத்தினிப் பெண் டிரை உயர்ந்தோர் ஏத்துவர் என்பதாகும். இன்னும் ஆராய்வார்க்கு அக்காவியமே கண்ணகி கற்பு மாண் பைப் புலப்படுத்தும் கலப்பாடுடையது என்பது தெளி வாகும. கற்புக்காசியாகிய கண்ணகியுடன் மதுரைமாநகர் அடைந்த கவுந்தியடிகள் அங்நகர்ப் புறஞ்சேரியில் வாழும் மாதரி என்னும் ஆயர்குல கங்கைபால் கண்ணகியை அடைக்கலமாக ஒப்புவித்தார். அப் பொழுது கண்ணகியின் சிறப்பை அப்பெண்ணுக்கு அறிவுறுத்தும் கவுந்தியடிகள் வாக்கில் கற்புடை மாதரின் பொற்புத்திறன் இனிது புலவைதாகும். என்னெடு வந்த இக்கண்ணகி அல்லாளின் வண்ணச் சீறடியை மண்மகள் என்றும் அறிந்த தில்லை. அத்தகைய மெல்லியல் செல்வ கங்கை ஊழ் வினேயால் கணவனுடன் கடுங்கதிர் வெம்மையில் கடந்து வந்தாள். அவள் தன் துயரைக்கூடப் பொருட்படுத்தாது கணவன் துயருக்காகக் கருத்