பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வள்ளுவர் சொல்லமுதம் யான் புகுந்ததற்குப் புரிந்த பிழைதான் யாது? என்று உள்ளம் நடுங்கி ஒலயிட்டாள். - அப்பொழுது அச்சதுக்கபூதம்,மருதியைநோக்கி, 'நீ எப்பொழுதும் பிறர் பேசும் பொருளொடு புணராப் பொய்ம்மொழிகளையும், பொருளொடு புணர்ந்த நகைமொழிகளையும் கேட்டலில் காட்டம் கொண்டனே; பிற தெய்வங்கட்கு நிகழும் பெருவிழாக் களைக் காண்டலில் விருப்புற்றன; ஆதலின் கணவனைத் தெய்வமென வணங்கும் கற்பு நெறியில் பிறழ்ந்தாய்; தெய்வப்புலவன் திருவள்ளுவன் சொல் லிய நல்லுரையினைத் தெளியாதொழிக் தாய் : 4 தெய்வம் தொழாஅள் கொழுநற் இருழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேருய்." அதனுல் விளக்த விளைவே இதுவாகும் என்று மறு மொழி பகர்ந்தது. மகளிர் கற்பாற்றலுக்கு மாதவ முனிவர்களின் தவவன்மையும் ஒப்பாக முடியாது என்பர் உயர்க் தோர். அத்தகைய கற்புத்திறனுல் தேவர்களையும் ஏவல்கொண்ட பாவையர் பலர் இந்நாட்டில் நிலவினர். கண்ணகி, ஆதிரை, மங்கையர்க்கரசி, புனிதவதி, சீதை, தமயந்தி, சாவித்திரி போன்ற கற்பரசியர் காவியம் போற்றும் தேவியராகத் திகழ்ந்துள்ளனர். சிறையிருந்த செல்வியாகிய சிதையின் ஏற்றம் கூறும் செங் தமிழ்க்காவியமாகிய இராமாயணத்தில் அனுமன்வாயிலாக அக்கற்பாசியின் ஒப்பிலாப் பெருமை உரைக்கப்படுகிறது. அசோகவனத்தில் சீதையைக் கண்டுவந்த சொல்லின் செல்வனுகிய