பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வள்ளுவர் சொல்லமுதம் என்று பாடும் பாரதியின் விரவாசகம் பெண்மைக்கு அளவிலாத பெருமை கருவதன்றே! இருபதாம் நூற்றண்டின் இனிய கவிஞராகிய கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, பெண்களின் உரிமைகளே அருமையாக விளக்கியுள்ளார். பெண் ணுய்ப் பிறப்பதற்கே பெருந்தவம் செய்யவேண்டும் என்பது அவர் கருத்தாகும். அவர்கள் மலர்க்கரத்கா லன்ருே மாநிலத்தில் அறங்கள் வளர்ந்தோங்குகின் றன! அல்லும் பகலும் அயராது உழைப்பவர் அப் பெண்களன்ருே கல்லும் கனிந்து உருகுமாறு அன்பு காட்டும் பண்புடையார் அப்பெண்பாலான்றுே: நோயால் வாடும் ஆடவர்க்குத் தாய்போல் பக்க மிருந்து பேணுவார் அப்பெண்டிர் அன்ருே கண்ணிர் துடைத்துக் கவலைபோக்குவாரும் இனிய உரைகளால் உள்ளத்தை ஊக்குவாரும் அம் மகளிரே. நெறி தவறிச் செல்லும் வம்பரையும் நேர்வழியில் செல்லு மாறு செய்யும் வல்லமை அவர்க்கே உள்ளதாகும். மானம் இழந்த மக்களையும் மாண்புடையாராகச் செய் யும் மதிவன்மை அவர்க்கே உண்டு. உயிர் நீங்கும் வேளையிலும் பக்கத்தில் உடனிருந்து கடவுளைக் கருதித் தொழுமாறு செய்வார் அத்தோகையரே. கணவனே இழந்த மகளிர்க்கும் பெற்ருேரை இழந்த பிள்ளைகட்கும் மகிழ்வூட்டி ஆறுதல் கூறுவார் அவ் அரிவையரே. சிறிய வயதிலேயே ஈசன் சேவடியில் சிங்தை செலுத்துமாறு செய்வோரும் அவர்களே. அன்பிற்காகவே வாழ்ந்து, அன்பினுல் ஆவியும் போக்கத் துணிவார் அப்பொன்னனையார். புன்முறு வல்பூத்த நன்முகத்தால் வீட்டைப் பொன்மனையாகப்