பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

°4 வள்ளுவர் சொல்லமுதம் நெருப்பை மடியிற் கட்டியதுபோலச் சோம்பலேச் சொந்தப் பொருளாகக் கொண்டவன் பெரும் பேதை யாவான். அவன் அழிவது உறுதி. அவனுக்கு முன்னுல் அவனது குடியும் அழிந்தொழியும் என்று அறிவுறுத்தினர் பெருநாவலர். அங்ஙனம் குடி மடிவது மட்டுமன்றிப் பல்வேறு குற்றங்கள் அவனே வந்தடை யும் என்றும் குறிப்பிட்டார். . . . . குடிப்பெருமையைக் கெடுக்கும் குற்றம் சிறிதும் சேராதவாறு ஒருவன் தனது குடியைக் காக்க வேண்டும். வங்த குற்றம் ஒன்றுதானே, சிறிதுதானே, இதற்கென்ன செய்வது என்று ஒருவன் சோம்பி யிருப்பானுயின் உறுவது பேரிழிவாகும். அவ் இழிசிலே வந்துற்ருல் அதனேயறிந்த பகலே அவன் இறக் தொழிவான் என்ருர் முன்றுறையரையனர்.

  • அன்றைப் பகலேயும் வாழ்கலார் நின்றது

சென்றது பேரா தவர்.' என்பது பழமொழிப் பாடலாகும். சோம்பல் உடையவனுக்குச் சுவர்க்க இன்பம் தானே வந்தடைந்தாலும் அதல்ை அவன் பயனெய் த மாட்டான். நிலமுழுதாளும் பெருவேந்தர் செல்வம், மடியுடையார்க்குத் தானே வந்துற்ருலும் அகல்ை பயனெய்தார் என்பர் வள்ளுவர். படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண் பயன் எய்தல் அரிது.” என்பது அவர் சொல்லமுதமாகும். முயற்சியின்றி அயர்ச்சியுடன் சோம்பித் திரிவா ரைச் சோர்வகற்றுமாறு நண்பர்கள் பலகால் இடித்