பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடியும் மறதியும் 75 துரைப்பர். எத்தனை அறிவுரை கூறினும் அவர் உள்ளத்தில் ஏறமையின் பின்னர் இகழ்ந்துரைப்பர். நண்பர்கள் இகழ்ந்துரைக்கத் தலைப்பட்டால் அயல வரும் இகழ்வது இயல்பன்ருே அவற்றிற்கெல்லாம் மறுமொழி பகரும் வல்லமை இல்லாமையால் மடியுடை யார் வாளா இருப்பர் என்ரர் வள்ளுவர். மேலும் அவர் பகைவ்ர்க்கு அடிமையாவர். ஒருவனது மடியால் குடிமைக்குமட்டுமே பன்றி. அவனது ஆண்மைக்கும் குற்றம் உண்டாகும். அம் மடியினே ஒழித்து ஊக்கத்தைப் பெருக்கவே அதனல் விளைந்த குற்றங்கள் அகல்வனவாகும். மடியில்லாத மன்னவன், மாலோன் தாவியளந்த மூவுலகும் ஒருங்கே பெறுவான் என்பார் பெருகாவலர்.

  • மடியிலா மன்னவன் எ ப்தும் அடியளத்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு." என்பது அப்புலவரின் பொய்யாமொழி. சோம்பேறிகள் சிலர் சிறிதும் உழைப்பின்றிக் கடவுள் கொடுப்பார் என்று கருதித் திரிவர். அவர்கள் செல்வத்தை அடைவது எங்கனம் : பாத்திரத்தில் உள்ள பாற்சோற்றைக் கையால் எடுத்துண்டா லன்ருே ஒருவனது கடும்பசி ஒழியும் அதனே முன்னுல் வைத்துக் கண்ணுல் நோக்கிக்கொண்டிருந் தால் அப் பசிப்பிணி அகல்வதுண்டோ? இல்லை யல்லவா! அங்கனமே ஒருவன் முயற்சியின்றிப் பெரு மடியுடையானுய்க் கிடப்பனுயின் அவன் வாழ்வு வளம் பெருது என்பது உறுதி. இதனை விளக்கவந்த மகா வித்துவான் பிள்ளேயவர்கள்,