பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிருப்பதோடு, சொல் குறித்து, பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் 33 குறட்பாக்கள் யாத்துள்ளார். இவ்வாறு சொல்லிலக்கணத்திற்காக 113 குறட் பாக்களை - அதாவது, தம் முழுநூலின், சற்று குறைய பன்னிரண்டில் ஒரு கூற்றினை ஒதுக்கி இருப்பதன் மூலம் சொற்களைத் தேர்ந்து ஆள்வதில் எத்துணை விழிப்பாய் இருக்க வேண்டும் என்பதை வற்புறுத்தியுள்ளார். இவ் வாறு வற்புறுத்தும் அவர், அவ்வழியில் சொற்களை ஆளாதிருப்பாரோ? 'ஓதி உணர்ந்தும், பிறர்க்கு உரைத் தும் தான் அடங்கா பேதையர்" அல்லரே அவர்! ஆகவே உரைத்த வழியே சொற்களைத் தேர்ந்து ஆண்டி ருப்பார்; ஆண்டுள்ளார். - - - திருவள்ளுவர் தாம் இயற்றிய ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் இன்ன சொல்லை எடுத்து விட்டு. அதன் இடத்தில் இன்ன சொல்லைப் போட்டால் பொருத்தமாக இருக்கும் என எவரும் எண்ணவும் இயலாநிலையில், அப்படியே மாற்றிப் போட்டால், அக்குறட்பாவின் பொருட்ச் செறிவே சீர்குலைந்து போகும் வகையில் வடித்து, தந்துள்ளார். எடுத்துக் காட்டுக்கு ஒரு பாட்டு: 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். M. -குறள் 69. இக்குறட்பாவில், 'ஈன்ற, பொழுது, இன், பெரிது, உவக்கும், தன் மகனைச் சான்றோன் என கேட்ட தாய்' எனப் பதினோரு சொற்கள் உள்ளன: இனி அவை ஒவ்வொன்றின் இயல்பினையும் ஆராய்வோம். ஈன்ற்:

  • f. நன்கலம் நன்மக்கட் பேறு " (குறள்: 60) அறி வறிந்த மக்கட் பேறு" (குறள் 61) என்ற குறட்பாக்களை

2