பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்ட பயிர் நன்கு கிளைத்து வளர்ந்து பயன் அளிப்பதற்கு ஏற்ப, நிலமும், நீரும் கலந்து சேறுபடுதல் வேண்டும். காதலன் உள்ளமும், காதலி உள்ளமும், இரு உள்ளங்கள் என்ற நிலைமறைய, ஒர் உள்ளம், என்ற உயர்ந்த நிலைக்கு ஆளாகும் இயல்பை விளக்க புலவர் ஒருவர். செம்மண் நிலமும் அதில்பெய்த மழை நீரும், ஒன்று கலந்து செஞ்சேறு ஆவதை உவமையாக்கி, அவ்வுவமைச் சிறப்பாலேயே, செம்புலப் பெயல்நீரார் என்ற சிறப்புப்பெயர் பெற்று விட்டதையும் கா ண் க. "செம்புலப் பெயல்நீர்போல *4டை நெஞ்சம் தாம் கலந்தனவே குறுந் (140) இதையும் உணர்ந்திருந்தார் திருவள்ளுவர் உள்ளத்தால் ஒன்றுபட்ட கணவன் மனைவியவர்க்கு. நிலத்தையும், அந்நிலத்தோடு கலந்த நீரையும் உவமை காட்டியுள்ளது காண்க. "நிலத்தொடு நீர் இயைந் தன்னார். (1323) நீரும் நிலமும் வாய்ந்து விட்டால் மட்டும் போதாது அவற்றைப் பயன்கொண்டு பயிர்செய்து, உணவுப் பொட்களை விளைவிக்கும் உழவர் பெருமக்களும் தேவை; அவர்கள் அத்தொழிலை மனம் விரும்பி மேற்கொள்ளும் வண்ணம், அவர்கள் செய்யும் தொழிலையும், அவர்களையும் சிறப்புச்செய்தல் வேண்டும்எனவும் உணர்ந்த வள்ளுவர் 'மக்கள் எத்தொழில் மேற்கொண்டாலும், அவர்களுக் கெல்லாம் உணவு அளித்து அவர்களை வாழவைப்பது உழவுத்தொழிலே; ஆகவே தொழில்களில் தலையாய சிறப்புடையது உழவுத்தொழில் 'உழவேதலை" (1031) என "உழவுத்தொழிலையும், உழுவார் உலகத்தவர்க்கு ஆணி’ (1032). "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (1033) "பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்" (1034) * இ. ரவ ார் ; இரப்பார்க்கு ஈவர்' (1035) என உழவர்பெருமக்களையும் பாராட்டியுள்ளார். 89