பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழுதொழில் நன்குநடைபெற உணவு உற்பத்தி பெருகுவதால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் நிறைவுபெறும் என்பது உண்மை. ஆனால் நாட்டின் உணவோடு நி ைற வு .ெ ப ற் று விடுவதில்லை. தனி மனிதனாயின், உடை, உறையுள், கல்விபோலும் எண்ணற்ற தேவைகளும், நாடாளும் அரசாயின், அரசுப்பணியாளர் ஊதியம், கல்வி, மருத்துவம்போலும் நல்வாழ்வுப்பணிகள், நாடுகாக்கும் படைக்கலம் பேனல்போலும் எண்ணற்ற தேவைகள் உள. அதற்குப் பெரும் பொருள் தேவை. இதையும் உணர்ந்துள்ளார் வள்ளுவர். ஒரு பொருளாக மதிக்கத்தகாதவரையும், பலராலும் மதிக்கச் செய்யவல்லது பொருட்செல்வம் அல்லது வேறுசெல்வம் இல்லை. 'பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்’’ (751) உயர்குடிப்பிறப்பால், அழிவால், ஆண்மையால், அழகால் ஒருவர் உயர்ந்திருப்பினும், அவர்பால் பொருள் இல்லையேல் அவரையாரும் மதிக்காமை மட்டும் அல்ல எள்ளிநகையாடுவதும் செய்வர். மேலை கூறியநலன் எதுவும் இல்லையாயினும், ஒருவர்பால் செல்வம் மட்டும் குவிந்து கிடப்பின், உலகத்தவர் அனைவரும் அவரைப்புகழ்ந்து சிறப்புச் செய்வர். 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு' (752) பொருள் என்பது ஒர் அணையா விளக்கு; அதைப் பெற்றவர் எங்குச்சென்று எப்பேர்ப்பட்ட பகையையும் வெல்லக்கருதி விடுவராயின், அவர் பகையாம் இருளைப் 90 .#