பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கம் வேண்டும்தான், ஆனால் அந்த ஆக்கத்தை எப்படியாவது, எத்தகைய ஆக்கமாயினும் அடைந்துவிடுதல் வேண்டுமென எண்ணிவிடுதல் கூடாது. ஆக்கம் எவ்வளவு பெரிதே ஆயினும், அப்பழுக்கற்ற ஆக்கமாக, அறவழியில் மட்டுமே வந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும் தென்புல மருங்கின் விண்டுநிறை "வாணன் வைத்த விருந்திபெறினும் பழிநமக்கு எழுகஎன்னாய்’ (மதுரைக்காஞ்சி:202-204) என்பது மாங்குடிமருதனார். தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்பால் கண்ட பல சிறப்புக்களில் தலையாயது "பழிஎனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்' என்பது கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, உலகத்து நல்லோர்பால் கண்ட நல்லியல்புகளில் ஒன்று (புறம்: 183) "விரிநீர் உடுக்கை உலகம் பெறினும், அருநெறிதுயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே” என்பது தமிழகத்து ஆயர்குலத்தவர்.பால். சோழன் நல்லுருத்திரன் கண்ட நல்லியல்பு (முல்லைக்கலி: 14) வரும் செல்வம். இவ்வாறு நல்வழியில் வரும் செல்வம் ஆதல்வேண்டும் என்பதிலும் வள்ளுவர் உறுதியாக உள்ளர்ர். செல்வம், நடுநிலைமை தவறாது நின்று ஈட்டிய செல்வம் ஆதல் வேண்டும். அ. து வே . அதை ஈட்டியவர்க்கே அல்லாமல், அவர் மக்களுக்கும், அம்மக்களின் மக்களுக்கு மாக வழிவழி அழியாது இருந்து உதவும். "செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி ஏச்சத்திற் கேமாப்பு உடைத்து' (112) ஓர் உயிரை, அது மக்கள் உயிரே ஆயினும், மாக்கள் உயிரே ஆயினும், அதைக் கொல்வதால்வரும் செல்வம், ஒருவனைப் பெரிய வாழ்க்கையில்-செல்வம் கொழிக்கும் 92.