பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையில் வைக்கும் என்றாலும் அச்செல்வத்தை வெறுத்து ஏற்க மறுத்துவிடவேண்டுமே ஒழிய அதை அடைய விரும் பலாகாது, இதையும் உணர்ந்துள்ளார் வள்ளுவர். 'நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை.’’ என்ற அவர் குறளினைக் காண்க (328) செல்வம்தானே உழைத்துத்தன் உ ைழ ப் பா ல் வந்ததாதல் வேண்டும். அவ்வாறு வந்த செல்வம் சிறிதே ஆயினும், அதுகொண்டு வாழ்வதால் பெறலாகும் இன்பத் திற்கு இணையே இல்லை. இவ்வுணர்வு. நல்ல மக்களுக்கே அல்லாமல், மாக்களுக்கும் உண்டு. தாம் உழுதலால் நெல் விளைந்து, கதிர் முற்றி அறுத்து அடித்து நெல்லை அகற்றி விட்டு, தன் முன்போட்ட வைக்கோலைத் தின்னும்போது, ஏர் உழுத காளைகள் இந்த வைக்கோல் தம் உழைப்பால் வந்தது என்பதால் மகிழ்ந்து செருக்குற்றுத் தின்னும் சி ற ப் ைப ப் புலவர்கள். வ ட ம வ ண் ண க் க ண் பெருஞ்சாத்தானாரும், கெளதமரும் பாராட்டியுள்ளனர். 'உழுத நோன்பகடு அழிகின்றிங்கு'; 'உழவொழி பெரும் பகடு அழிதின்றாங்கு”. (புறம்: 125;366) இதையும் வலியுறுத்துயுள்ளார் வள்ளுவர். தன்உழைப்பால் கிடைத்தது தெளிந்த நீர் போலும் கூழே ஆயினும், அதை உண்பதைவிட இனிமையான உணவுவேறு இல்லை.என்ற பொருள்படவரும் அவர் குறளினைக் காண்க. - 'தெண்ணிர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலி னுங்கினியது இல்' (1065) பொருள் ஈட்டும் நிலையில், எத்தகைய செல்வத்தை. எத்தகைய முறையில் ஈட்டலாம் என அறிவுறுத்திய வள்ளுவர். 93