பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தகைய செல்வத்தை எத்தகைய வழிகளில் ஈட்டக்கூடாது என்பதையும் அறிவுறுத்தியுள்ளார். வேண்டியவர், வேண்டாதவர், அயலார்ஆகிய மூவகையின ரிடத்தும், நடுவுநிலைமையோடு நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நடந்துகொள்ளாது நடுவுநிலைமை தவறிநடந்து கொள்வதால் கிடைக்கும் செல்வம் கேடுஏதும் பயக்காது நல்லவனவற்றையே பயக்கும் என்றாலும், அத்தகைய செல்வத்தை ஒ ரு .ெ ந டி ப் போ து ம் வைத்திராது; அது வந்தடைந்த அப்போதே அதைக் கைகழுவிவிட்டுவிட வேண்டும் என்பது ஒருவழிகாட்டுநெறி. 'நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்’’ (113) பிறர் பொருளை, அவர் அ றி யா நிலயில் களவாட முனைந்து சேர்ந்த செல்வம் அளவுகடந்து பெருகியதுபோல் தோன்றினும் பலநாள் திருடன் - ஒருநாள் பிடிபடுவான் என்பதற்கு ஏற்ப, அக்களவு ஒருநாள் வெளிப்பட்டுப்போக அச்செல்வம் எல்லாம் அறவே இல்லாமல் போய்விடும்' ஆகவே களவாடிப் பொருள் தேடல் கூடாது இதுவும் அவர் வழிகாட்டும் நெறிதான். கனவில்ை ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்' (283) ஊரும் உலகும் தூற்றும் பழிச்சொல் மகலபோல் குவியக் குவிய, ஒருவன் ஈட்டும் பெருஞ்செல்வத்தைக் காட்டிலும் சான்ருேர்பால் பற்றிக்கிடக்கும் வ று ைமயே பலராலும் போற்றுதற்கு உரியதாகும்; ஆகவே பழியோடுவரும் பொருள் செல்வத்தை எவரும் பெறலாகாது மற்றுமொரு வழிகாட்டு நெறி இது. 94