பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு :) (215) ஊருக்கெல்லாம் உயிர்களுக்கு-கெல்லாம் உதவும் நல்ல உள்ளம் வ ய் த் த ஒருவன்பால் செல்வம் சேர்ந்துவிடின் அச்செல்வம், ஊரெல்லாம் கூடும். ஊர் மன்றத்தில், மா, பலா போலும் பழமரங்கள் வளர்ந்திருந்தால் அவை எவ்வாறு ஊர்மக்களுக்கெல்லாம் பயன்படுமோ அவ்வாறே உலகத்தவர் அனைவர்க்கும் பயன்படும். இதுவும் வள்ளுவர் வாக்குதான் ! ' பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான் கண் படின் :: (216) அன்புடைமை, அருள் உடைமை, நாணம் உடைமை ஊ ரு க் .ெ க ல் ல ள ம் உதவும் உள்ளம் உடைமை கண்ணோட்டம், வாய்மை ஆ கி ய பண்புகளை உடைய பெருந்தகையாளன் ஒருவன்பால் சேர்த்துவிடும் செல்வம், வேர், அடிமரம், கிளை, இலை, பூ, காய், கனி, ஆகிய அ ைன த் து ப் பகுதிகளும், நோய்தீர்க்கும் மருந்தாகிப் பயன்படும் மரம்போல், அனைத்து வகையிலும், அனைத் தவர்க்கும் பயன்படும், இதுவும் அவர் அறிவுரையே. 'மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் - பெருந்தகை யான்கண் படின்: (217) இனி, தகுதியில்லாதார் மாட்டுச்சேரும் செல்வம் படும் பாடுபற்றி வள்ளுவர் கூறுவன மூன்று. பெற்றமாதா மடிப்பிச்சை எடுக்க மகன் கோதானம் செய்தானாம் என்பது நாட்டுப்பழமொழி பேதை அதாவது, நல்லனவற்றை எல்லாம் கைகழுவ விட்டுவிட்டு நல்ல ன அல்லன வற்றையெல்லாம் வருந்தி வரவழைத்துக் .ெ கா ள் ப வ ன், அத்தகையான்பால் பெருஞ்செல்வம் வந்தடைவது அரிதல் ஒருவேளை அடைந்துவிட்டால், 96