பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்செல்வத்தால், அவன் உற்றார், உறவினர் பயன் அடைவார்களா? அவன் அவர்களுக்கு உதவுவானா என்றால் இல்லை அவனோடுகூடி, அவன் இனிக்கப் பேசிப் பழகும் அயலார்களே பயன் அடைவர்; அவர்களுக்கே அவனும் வாரி வழங்குவன் இதுஓர் அறிவுரை. 'ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை" (837) அதுவேகுரங்கு; அதற்குக்கற்ரும் ஊற்றிவிட்டால் அதன் குறும்பாட்டத்திற்குச் சொல்லத் தேவையில்லை. அதேபோல், இயல்பாகவே பித்துபிடித்தவன் ஒருவன்; விட்டில் உள்ளதை வாரித்தெருவில் வீசுவன்.தெருவில் உள்ளதை எடுத்துவிட்டுள் கொண்டுபோய் வைப்பன்; பொல்லாத வம்புகளையெல்லாம் வரவழைத்து விடுவன். அத்தகையானுக்கு மதுவும் கொடுத்து விட்டால், அவன் கொடுஞ்செயலுக்கு அளவே இராது, பேதை, அதாவது இயல்பாகவே செய்யத்தகாதன எல்லாம் செய்பவன். அ. த் த ைக ய ர ன் கையில் செல்வம் சேர்ந்துவிட்டால்; அவன் செய்யும் தவறுகளுக்கு அளவே இராது. இதுவும் வள்ளுவர்கண்ட உண்மை. - 'மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடமை பெறின்’ (838) பொருள் ஈட்டுவது, தான்வாழ: பிறரை-வாழ்விக்க; அப்போது தான் அப்பொருள் பயனுடையதாகும் அதற்கு மாறாக பெரும்பொருள் சேர்த்துவைத்துக் கொண்டி ருப்பவன்; அப்பொருளைத் த ன க் கும் பயன்படுத்திக் கொள்ளாமல் தேவைப்படும் பிறர்க்குக் கொடுத்து உதவுவதும் செய்யாது -7- 97