பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணே வைத்திருப்பனாயின் அச்செல்வம் அவனுக்கே கேடு விளைத்து விடும்; அவன்பால் பெரும்பொருள்-பயன் இன்றிக் குவிந்து கிடப்பது காணும் பிறர். அதை கவர்ந்து கொள்ளவே மு ய ல் வ ர் அம் முயற்சிக்கும் அவன் இடையூராக இ ரு ப் பா ன் என அறிந்தால், அவனைத்தீர்த் கட்டவும் செய்வர். ஆக ேச ர் ந் த செல்வமே, அவன் உயிரைப் போக்கிவிடும். 'ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான். (1006) எவராலும் விரும்பப்படாதவன்; மாறாக-அனைவராலும் வெறுக்கப்படுபவன் ஒருவன் பால் செல்வம்சேர்ந்துவிடின் ஊர் நடுவே நச்சுமரம் அதாவது, அதன் வேர், பட்டை, இலை, பூ, காய், கனி, இவற்றில் எதையேனும் தின்றாலோ தொட்டாலோஉயிரைப்போக்கிடும் மரம் வளர்ந்து விடுமாயின். எப்படி, அது ஊராருக் கெல்லாம் உறுதுயர் விளைக்குமோ, அதுபோல் கொடியோன் பால் சேர்ந்த .ெ ல் வ. மு. ம் பலர்க்கும் உயிர்போக்கும் கொடுமையைச் செய்துவிடும். 'நச்சப் பாடதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று: - (1008) பொருளின் இன்றியமையாமை. அ ப்பொரு ைள ஈட்டும் வழிமுறைகள்; அவ்வழிமுறைகளில் ஏ ற்கு ம் வழிமுறைகள், ஏ ற் க லா கா வழிமுறைகள், ஏற்கும் வழிமுறைகளில் வந்த செல்வத்தின் சிறப்பு ஏற்கலாகா வழிமுறைகளில் வந்த செல்வத்தின் இழிவு ஆகியவைகளை விளக்கிய வள்ளுவர். அடுத்து அப்பொருளைக் காக்கும் வழிமுறைகளை விளக்கியுள்ளார். 98