பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நாட்டில் சிலரே செல்வம் உடையராகவும் பலர் வறியராகவும் இருப்பதற்குக் காரணம். அந்நாட்டில் பொருள் சேர்க்கும் முயற்சி உ ைட யார் சிலராகவும் முயற்சி ஏதும் மேற்கொள்ளாது. சோம்பி இருப்பார் பலராகவும் இருப்பதே காரணம். ஆகவே இடைவிடா முயற்சி வேண்டும். ' குந்தித்தின்ருல் குன்றும் மறையும்' என்பது பழமொழி, பொருள் சேர்ந்துவிட்டது. இனி நாம் உழைக்கத் தேவை இ ல் ைல. ஒய்வு கொண்டு விடலாம் எனக் கருதிவிடக்கூடாது. இருந்து விட்டால் மலைபோல் குவிந்து கிடந்த பெருஞ்செல்வம் நாளடைவில் அறவே இல்லாகிப் போய்விடும். முயற்சி செல்வத்தைச் சேர்ப்பது! முயற்சி இல்லாமை, செல்வம் இல்லாமைக்குக் கொண்டு போய்விடுவது, இந்த உண்மைகளையும் வள்ளுவர் அறிவுறுத்தியுள்ளார். "இலர்பல ராகிய காரணம் நோற்பார் (முயற்சியுடையார்) சிலர் பலர் நோலா தவர்' (270) 'முயற்சிதிருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்' (616) என்பன அவ்வறிவுரைகள், - . ஈட்டிவைத்திருக்கும் பொருள் அழிவுக்குப் பல வழிகள் உள் ள ன . பெருவெள்ளம், பெருநெருப்பு இவற்றாலும் அழிவுறும்: கள்வரால் அழிவு றும் பொருளுடையார் கவனக்குறைவால் கைவிடப்படும், சூதாடல் போலும் இழிசெயல்களால் அழிவுற்றுப் போகும். ஆகவே செல்வத்தை ஈட்டிவிட்டால் மட்டும் போதாது; அதுஎவ்வகையிலும் 99