பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவுற்றுப் போகாவண்ணம் காத் த லு ம் வேண்டும் இதையும் எச்சரித்துள்ளார் வள்ளுவர். பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை என்பது அது. முயன்று ஒரளவு பொருள் ஈட்டி வைத்திருப்பான் ஒருவன், 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து', 'செல்வம் என்பது சிந்தையிள் நிறைவே' என்பதற்கு ஏற்ப; பெற்ற செல்வத்தோடு மனநிறைவு கொள்ளுதல் வேண்டும். தான் பெற்றிருக்கும் செல்வத்தினும் பெருஞ்செல்வம் பெற்றிருப்பான் செல்வ நிலை நோக்கிப் பொறாமை கொள்ளுதல் கூடாது மாறாகப்பொறாமை கொண்டுவிட்டால். அது. அவனை அறமல்லாச் செயல்களையெல்லாம் செய்யத் தூண்டும். தூண்டியவழி செயல் படத் தொடங்கிவிடுவன். அது, அவன்பால், அவன் உழைப்பால் குவிந்திருந்த செல்வங்களை அழித்து விடுவதோடு அவனைத் தீயில் தள்ளினார் போலும் கொடுந் துன்பத்திலும் கொண்டு போய்த்தள்ளிவிடும், இதை உணர்ந்தவர் வள்ளுவர்: ஆகவே, 'அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்’ - (168) என எச்சரித்துள்ளார். - இதுகாறும் வள்ளுவர் கூறியன அனைத்தும் அரசுத் தலைமைக்கண் உள்ளார். உட்பட, நாட்டவர் அனைவர்க்கும் பொதுவான பொருளாதாரக் கொள்கைகள். அவை கூறிய அவர். நாடாளும் தலைமகனுக்கு மட்டுமே பொருந்தும் பொருளாதாரக் கொள்கைகள் சிறவற்றையும் கூறியுள்ளார். 'செய்க பொருளை” என்பது அனைவர்க்கும் பொருந்து வதுபேலவே, அரசாள்வார்க்கும்பெருந்தும் வ ள ம் தரும் தொழில்களை அரசுதானே தொடங்கிப் பெருள்களை இயற்றுவது அரசு பொருள் ஈட்டும் வழிகளில் ஒன்று. 100