அடுத்து ஈட்டும் பொருள்கள், பாடுபட்டுத்தேடிப் பெற்ற பணத்தைக் .ெ க ச எண் டு தானும் பயன் கொள்ளாமல், பிறர்க்குஉதவுவதும் செய்யாது புதைத்து வைத்துவிட்டு மாண்டுபோக, நெடுங்காலம் மண்ணுள் மறைந்துகிடந்து பின்னர் பிறர்ஒருவரால் தோண்டி எடுக்கப்பட்ட பொருள் இருப்பது தெரியாமல் மண்ணுள்மறைத்து கிடந்து பின்னர் அறியப்பட்டு, தோண்டிஎடுக்கப்பட்ட பொன், வெள்ளி, இரும்பு போல்வனவும், எரிளண்ணெய், எ ரி க ற் று போல்வனவும் மலைக்காடுகளில் மண்டிக்கிடக்கும். சந்தனம், தேக்கு போல்வனவும் கடல்படு பொருள்களாம் உப்பு, மீன் போல்வனவும் ஆகிய பொருள்களாம். நிலவரி நீர்வரி, தொழில்வரி, வருமானவரி,எற்றுமதிவரி, இறக்குமதி வரி போலும் மக்கள்தரும் வரிகள் மூலம் வரும் வளனும் அரசு ஈட்டும் பொருள்களாம். வரிகள் மூலம் கிடைக்கும் பொருள். பொருள் ஈட்டும் வழிகளில் ஒன்றே ஒழிய அது ஒன்றையே பொருள் ஈட்டும் வழியாகக்கொண்டு விடுதல் கூடாது. குடிமக்களைப் பசி, பிணி, பகைகளிலிருந்து காப்பதற்குக் கைம்மாறாக, அவர்கள் தருவதேவரி. அதனால் தான் அதற்குக் 'குடிபுரவு” எனும் பெயரும் இடப்பட்டுள்ளது. ஆக, அது, அளவோடு இருத்தல் வேண்டும். நாடாள்வான் திறமை உள்ளவனாயின். அதை அளவோடு, பெறுவன்: திறமை அற்றவனாயின், அது ஒன்றையை நம்பி, அளவுக்கு மீறிப் பெறவிரும்புவன். இந்த உண்மையை. நாடாண்ட நல்லவன் ஆகிய, சோழன் நலங்கிள்ளியே கூறியுள்ளான். வரிமேல்வரி வாங்குவோனை. ஆளுந்திறமையற்ற சிறியவன் எனப் பழித்துள்ளான். 'குடிபுரவு இருக்கும் கூர்இல் ஆண்மைச் சிறியோன்". (75) என்பது புறநானூறு. - 101
பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/112
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.pdf/page112-725px-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.pdf.jpg)