பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரியினை அ ள வ றி ந் து வாங்குவதால் ஆகும், நன்மைகளையும், அளவறித்து வாங்குவதால் நேரும் கேடுகளையும், புலவர் பிசிராந்தையார். ஒரு பாட்டில் விளங்க எடுத்துக்காட்டியுள்ளார். விளைநிலம் மாஅளவு மிகச்சிறிது ஏன்றாலும், அதையும் முறையாகப் பயிரிட்டு, அதில் விளையும் உணவுப்பொருளை நாள்நோறும் இவ்வளவு தான் எனக் கணக்கிட்டுத் தந்துவந்தால் அதுவே, யானைக்குப் பல நாளைய உணவாகப் பயன்பெறும். மாறாகப் பல வேலிஅளவு பரந்துள்ள பெருநிலத்தில் பயிர் செய்துவிட்டு, விளைந்து பண்பட்டிருக்கும் காலத்தே யானை ஒன்றை, அந்நிலத்தில் அவிழ்த்துவிட்டு, அது விரும்பியாங்கு உண்ணச் செய்துவிடின், பரந்த அந்த நிலத்தில் விளைந்து நிற்கும் பயிர் அனைத்தும் ஒரே நாளில் பாழாகிவிடும். யானையின் வாயுள் சென்று பயன்படுவதினும் அதன் கால் களால் மிதியுண்டு அழிவனவே பெரும்பகுதியாம். அதைப் போலவே, ஆளும் அரசன் அறிவுடையனாகிக் குடிகளிடமிருந்து எ வ் வ ள வு வரிபெறலாம் அவர்களால் எவ்வளவு கொடுக்க இயலும் என்பது அறிந்து, அதற்கேற்ப, ஆறிலொரு கடமைஎன்பதைப்போல்,ஒழுங்கான ஒருமுறையை அடிப்படையாகக் கொண்டு, வரிவாங்குவனாயின், மக்கள் மன்னனுக்குக் கொடுக்க வேண்டியதையும் கொடுத்துவிட்டுத் தாங்களும் நன்கு வாழ்வர், அரசனும் நல்வாழ்வு வாழ்வன் அதற்கு மாறக, அரசன் நாளும் கொடுங்கோலனாய்க் குடிகள் அழ அழ, அவரிடமிருந்து வரி வாங்குவதையே அற நெறியாகக் கருதுவோரையே அமைச்சராகவும் கொண்டு. குடிகள் வருந்த வரிவாங்குவதை வழக்கமாகக் கொண்டுவிடு வனாயின், மக்கள் வரிச்சுமை தாங்கமாட்டாது வருந்தி வாழ்விழந்து வாடிவதைவர். அவனும், அந்நாட்டு அரசனாய் நெடிதுநாள் வாழான்” இது அவர் அறிவுரை, வருவது அவர் பாட்டு. 102