பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே, மாநிறைவு இல்லதும் பன்னாட்டு ஆகும்; நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும். அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே. கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; மெல்லியள் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானைபுக்க புலம்போலத், தானும் உண்ணான் உலகமும் கெடுமே’. -புறம்;184. நாடாள்வான், தன்குடிமக்கள்பால், தருகவரி என இரு கை ஏந்தி இரந்து நிற்பனாயினும், அது, வழிப்போவாரை வழிமறித்துக் கைவேலைக் காட்டி அச்சுறுத்தி, அ வ ர் கைப்பொருளைக் கவர்வதற்கு நிகராகும்என, வரித்தண்டலை வன்மையாகக் கண்டித்துள்ளார் வள்ளுவர். "வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு' (552) பொருளை ஈட்டிவிட்டால் மட்டும் போதாது. பொருள் அழிவிற்கு வாய்ப்புக்கள் அதிகம். இயற்கையின் சீற்றம், பகைவர், கொள்ளையர், கள்வர்போல்வரால் அழிவுநேரா வண்ணம் பொருளைக்காத்தல் வேண்டும். இயற்றி, F4ఉ, காத்தபொருளாம் பயன்தரும் வகைகளில் பகிர்ந்து அளிக்கவும்வேண்டும். பொருள்நிலை குறித்த இவை அனைத்தையும் ஒரு குறளில் கூறியுள்ளார் வள்ளுவர், 103