பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு: 1 *என் கடன் பணி செய்து கிடப்பதே ! என் தமிழ்ப்பணி புலவர் கா. கோவிந்தன் 1932 : செய்யாறு உயர்நிலைப் பள்ளியில் 8-வது வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறேன். தமிழாசிரியர், உயர்திருவாளர், மகாவித்வான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள். எங்கள் ஊரில் பானு கவியார் என்ற பெரும் புலவர், து ற வி யார் இருந்தார். வடலூர் வள்ளலார் இயற்றிய அருட்பா குறித்து எழுந்த அருட்பா, மருட்பா' வாதத்தில், அ ரு ட் பா வாத நெறியாளரோடு நின்று வாதிட்ட வன்மையாளர். எங்களுரில் கோயில்கொண் டிருக்கும் அருள்மிகு வேதபுரீஸ்வரர், திருஞானசம்பந்தர் அவர்களால், ஆண்பனை பெண்பனையாகப் பாடப் பெற்ற பெருமைக்குரிய பெருமான். அவர் துணைவியார் பாலகுஜாம்பிகையார். அந்த அம்மையார்மீது இளமுலை நாயகி பிள்ளைத் தமிழ்' என்ற பொருள் செறிந்த நூலைப் பா டி யவர் பானுக வியார். அத்தகு பெரும் புலமை வாய்ந்த பானுகவியாரை வாதத்தில் வென்றவர் திரு. வீரபத்திரப் பிள்ளை அவர்கள். . . - அவர் வேலூரில், இன்று வெங்கடேசுவரா மேல் நிலைப் பள்ளி என அழைக்கப்பெறும் அன்றைய பூரீ மகந்த தேவஸ்தான உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று விட்டார். அவர் இடத்திற்குக் காவேரிப்பாக்கம் உயர் நில்ைப் பள்ளியி ல் பணிபுரிந்திருந்த திரு. ஒளவை சு துரைசாமிப் பிள்ளை அவர்கள் வந்துசேர்ந்தார். தென் புலவர் அவர்கள் கடைசியாக எழுதிய கட்டுரை. 105 t