பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டாள். 'ஈன்ற” என்ற சொல்லை ஆண்ட வள்ளுவர் துணையால். பொழுது: 'அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்', "மக்கள் மெய்திண்டல் உடற்கின் பம்; மற்றவர் சொற் கேட்டல் இன்பம் செவிக்கு" " குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” (குறள்: 64, 65, 66) இக் குறட்பாக்கள் - வழி மக்கள், தம்மைப் பெற்றவர்களுக்கு எப்பொழுதெல்லாம் இன்பம் ஊட்டுவர் என்பதை விளக்கியுள்ளார் திரு வள்ளுவர். 'குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் சவ்வியும் துமுந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்கள்" என்ற புறப்பாட்டின் (188) மூலம் அம்மக்கள் மகிழ்ச்சிதரும் நிலைகளை விளக்கியுள்ளார், பாண்டியன் அறிவுடைநம்பி என்ற பாவல காவலன். 'பெற்ற அன்றினும், பிஞ்ஞகன் பிடித்த அப்பெரு வில் இற்ற அன்றினும் எறிமழுவாளவன் இழுக்கம் உள்ள அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்' (கம்ப. அயாத்தி: மந்திரம்: 42) என்பதன் மூலம் மக்கள் எந்நிலையிலெல்லாம் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தருவர் என்பதை விளக்கியுள்ளார் கம்பர். இவ்வாறு மகன் பிறந்து பெரியவனாகும் வரையி லான அவன் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு சிறப்புக் கண்டும் மகிழ்பவள் தாய். அவ்வாறாகவும் ஈன்ற பொழுதைய இன்பத்தை மட்டும் தனித்து பிரித்துக் கூறியிருப்பானேன்? மகனைப் பெறும் வரை, அவள் 4