என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுமாறும், ஆற்றும் சொற்பொழிவை அப்படியே எழுதித் திருமாறும் வேண்டினார். நானும் அது செய்தேன். அம்மாநாட்டினைத் தொடர்ந்து திரு. சுப்பையா அவர்களின் நட்பு தொடர்ந்தது. இலக்கியம் தொடர் பான நூல்களை எழுதித் தருமாறு அன்புக் கட்டளை இட்டார். 'திருமாவளவன்" என்ற முதல் நூல் 1951இல் வெளிவந்தது. (என் முதல் மகனின் பெயரும் திருமாவளவன் என்பது குறிப்பிடல் நலம் அதைத் தொடர்ந்து சங்ககாலப் புலவர் என்ற வரிசையில் 16 நூல்களையும் அரசர் என்ற வரிசையில் ஆறு நூல் களையும் வெளியிட்டார். புலவர் வரிசையில் முதல் நூல் 1952லும், அரசர் வரிசையில் கடைசி நூல் 1955லும் வெளிவந்தன. தமிழ் எழுத்தாளர் உலகிற்கு அறிமுகமாகாத என் நூல்கள் இருபத்தைந்தை மூன்றாண்டு கால அளவில் வெளியிட்டு, எனக்குப் பெருமை சேர்த்த திருவாளர் பிள்ளை அவர்களுக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன். எழுத்துப்பணி தொடர, மலர் நிலையம், வள்ளுவர் பண்ணை, அருணா பதிப்பகம் என்ற வெளியீட்டாளர் மூலம் பல நூல்கள் வெளிவந்தன. அரசியல் பணிகளுக் கிடையே கால்டுவெல் அவர்களின் ஒப்பிலக்கண மொழி பெயர்ப்பு 1959-ல் வள்ளுவர் பண்ணை மூலம் வெளிவந்தது. 1990 ஏப்ரல் 15-ஆம் நாளன்று, என் ஐம்பதாவது நூலாக திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் தமிழர் வரலாறு மொழிபெயர்க்கப் பெற்று, திரு. பிள்ளை அவர்களின் மருகர் திரு. இரா. முத்துக்குமாரசுவாமி அவர்கள் முயற்சியால் கழக வெளியீடாக வெளியிடப் ஏறது. அவருக்கு நன்றி. 114
பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/125
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை