பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு: 3 மதுரை காமராசர் பல்கலைக் கழக "தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டம் 7–10–1991 புலவர். கோவிந்தனார் 'திராவிடஇயக்க வரலாற்றிலும், அத்துடன் இரண்டறக் கலந்து விட்ட தமிழகத்தின் ஐம்பது அறுபது ஆண்டுக்கால வரலாற்றிலும் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள புலவர் கோவிந்தனார் அவர்களுக்கு நம் பல்கலைக்கழகம் இன்று "தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்னும் உயரியபட்டம் வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பொற்பதக்கம் அளித்துப் பாராட்டுகிறது. புலவர் கோவிந்தன் அவர்கள் சைவமும் தமிழும் தழைத்தோங்கிய குடும்பத்தில் 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாள், காங்கமுதலியாருக்கும் சுந்தரம் அம்மையாருக்கும் ஆறாவதுமகனாகப் பிறந்தர்ை. செய்யாறு உயர்நிலைப் பள்ளியில், உரைவேந்தர்; சித்தாந்த கலாநிதி ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்களிடம் தமிழ்பயின்ற பெருமை இவருக்கு உண்டு இவருக்கு இளமையிலேயே அறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. 1934 ஆம் ஆண்டு, பள்ளிப் படிப்பை முடித்தபின், ாஞ்சம் கொஞ்சமாகப் பெரியார் ஈ. வெ. ரா. அவர்களின் ாதைக் கொள்கைகளினால் புலவர். கோவிந்தனார் பட்டார். 1937 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு 118.