பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றோர்க்கு மகள். அவள் கணவனுக்கு மனைவி; வாழ்க்கைத் துணை. ஆனால் மகனைப் பெற்றதும் இவை யெல்லாவற்றிலும் சிறந்த தாயாம் நிலையினை அவள் அடைகிறாள். தம்மின் தம் மக்கள் அறிவு டைமை மாநிலத்து மண்ணுயிர்க்கெல்லாம் இனிது என்ற வகையில் உலகம் போற்றும் ஒருவனை உலகிற்கு அளித்த பெருமைக்கு உரியவளாகி விடுகிறாள். மலடி மலடி என்று மாநிலத்தார் ஏசாமல், தாய் என்னும் பெருமைதனைத் தரணியில் பெற்றவளாகிறாள். ஆகவே ஈன்ற பொழுதைய இன்பத்தைச் சிறப்பித்துக் கூறி யுள்ளார் குறளாசிரியர். இன்: இன் எனும் இடைநிலைச் சொல் காட்டிலும் எனும் பொருளுடையது. அதை விடுத்து, 'ஈன்ற பொழுது - பெரிது உவக்கும்” எனக்கூறியிருந்தால், மேலே கூறிய மகனின் வாழ்க்கை நிலையில் காணலாகும் உயர்வு கண் டெல்லாம் மகிழ மாட்டாள், ஈன்ற பொழுது மட்டுமே மகிழ்வாள் எனப் பொருள் தந்து தாய்க்கு பெரியதொரு இழுக்கத்தை தந்துவிடும். அதை தவிர்க்க 'இன்' இன்றி யமையாது இடவேண்டியதாயிற்று. பெரிது: பெரிது என்ற இச்சொல்லை விடுத்து 'ஈன்ற பொழு தின் உவக்கும்" என்று கூறியிருந்தால், மகன் வாழ்க் கையில் காணலாகும் பல்வேறு வளர்ச்சி நிலையிலும் தாய் அடையும் இன்பம் அனைத்தும் ஒரு நிலையின வாம் எனப் பொருள் தந்து, ஈன்ற பொழுதைய இன்ப அளவைக் குறைத்துவிடும். அக்குறைபாட்டினைத் தவிர்த்து; அப்பொழுதெல்லாம் மகிழ்வாள். ஆனால், ஈன்ற பொழுதில் பெரிதும் உவப்பாள் என ஈன்ற பொழு தைய இன்பப் பெருக்கை தனியே பிரித்துக் காட்ட, 'பெரிது" என்பது வேண்டப்பட்டதாயிற்று. 5