பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமனதாகச் சட்டப் பேரவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் துணைத் தலைவராகவும், தலைவராகவும் பணியாற்றிய கால கட்டத்தில்தான் பலமுக்கியமான சட்டங்கள் நிறை வேற்றப்பட்டன என்பது இங்கே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். அரசியல்பணி புலவர் அவர்களின் புறப்பணி என்றால், தமிழ்ப்பணி அவரது அகப்பணி ஆகும், 'சங்க காலப் புலவர் வரிசை', 'சங்ககால அரசர் வரிசை', 'பண்டைத்தமிழர் போர்நெறி’, கால்டுவெல் ஒப்பிலக்கணத் தமிழாக்கம்’ முதலான நூல்கள் அவரது இலக்கியப்பணிக்குக் கட்டியம் கூறுவனவாகும். இலக்கியம், இலக்கணம், வரலாறு என்னும் முத்துறைகளிலும் மிகுந்த நூல்களைப் படைத்தவர் புலவர் கோவிந்தன் அவர்கள். + தமிழால் வளர்ந்து, தமிழை வளர்த்து தமிழ்த் தொண்டால் உயர்வுபெற்ற புலவர் கோ வி ந் த னார் அவர்களுக்குத் 'தமிழ்ப் பேரவைச் செம்மல் (1986) என்ற பட்டத்தினை வழங்கி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பெருமைப்படுகிறது'. நன்றி: மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ச் செம்மல்கள் பேரவை. 穆彰 οό భ 120