பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவக்கும்: மகிழும், களிக்கும் என்பன போலும் சொற்களில் யாதேனும் ஒன்றினை ஆண்டிருந்தாலும் குற்றம் இல்லை. ஆனால் உவக்கும் என்ற சொல்லைத் தேடித் தெரிந்து ஆண்டுள்ளார். உவகையாவது: அளவிறந்த மகிழ்ச்சி, அளவிறந்த களிப்பு, அளவிறந்த இன்பம்; நெஞ்சு நிறைந்து வழியும் மகிழ்ச்சி, களிப்பு 'மெய்ம்மலி உவகை (நற்: 43, குறுந்: 398, புறம்: 45). அகம்மலி உவகை (மலைபடுகடாம். 84) 'நெஞ்சமலி உவகை" (பதிற்று: 40, 26) என்ற ஆன்றோர் வாக்குகளை அறிக ஈன்று புறம் தந்த தன் கடன்: சான்றோன் ஆக்கிய தந்தை கடன் ஆகியவற்றிற்கு ஈடாக மகன் பால் தான் எதிர்பார்த்த பெருமையைக் காட்டிலும் மிகப் பெரும் பெருமையைக் கண்டதனால், தாய் அடைந்த அளவிருந்த மகிழ்ச்சியை உணர்த்த வேண்டியிருத்தலின், உவகை என்ற சொல்லை அங்கு இடவேண்டியதாயிற்று. 'சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை, ஈன்ற ஞான்றினும் பெரிதே (புறம்: 277) சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணுTஉ, ஈன்ற ஞான்றினும் பெரிதும் உவந் தனளே" (புறம்: 278) என ஆண்டெல்லாம் கூட "உவகை" என்ற சொல்லையே ஆண்டிருத்தல் காண்க. தன்: மகன்களெல்லாம் ஒரே பண்புடையராகி விடுவ தில்லை. நாட்டவர் போற்றும் நல்லவனாகப் புகழ் பெறுவான் ஒருவன். ஊரெல்லாம் பழிக்க நன்று உள்ளக் கால் விற்றற்குரிய கயவனாகிக் கழிவன் ஒருவன்; பிறர் முன்னவனை க் காட்டி, "இவன் யார்' என்றவழித் 'தன் மகன்” எனப் பெருமிதம் தோன்ற பதில் அளிப் பாள் தாய்: பின்னவனைக் காட்டி கேட்ட வழி 'அவன் 6