பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாவனோ? யான் அறியேன்" என்பாள் தாய். நல்ல மகனை நாடு போற்றும்; அல்லாதவனை அவனி துாற்றும். . இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறுவின்று எய்துப செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மல் (அகம்: 66) என நல்ல மகனைப் பெற்றவளைப் பாராட்டியதன் மூலம் அந்நல்ல மகனைப் பாராட்டியுள்ளார் புலவர் செல்லூர்க்கோசி கண்ணனார். தகாக் காதல் கொண்டு, தவறு செய்து கொலையுண்டு போனான் மகன் எனக் கேட்ட சோழ மன்னன் ஒருவன். 'மகனை முறை செய்த மன்னவன் வழி ஒர் துயர் வினையாளன் தோன்றினன் என்பது வேந்தர் தம் ச்ெவி உறுவதன் முன்னர் ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றுக --மணிமேகலை: 22-210-213. என ஆணையிட்டான் எனவும், அம்மகன் கொலை யுண்டது. கேட்ட அவன் தாய் அரசமாதேவி ஆற்றாது அழுவது கண்ட ஒரு மூதாட்டி, - 'தன் மகன் காத்தன்று. பிறர் மகன் கொண்டன்று, என் எனப்படுமோ நின் மகன் மடிந்தது?" -மணிமேகலை (23:17-18) எனக் கேட்டுத் துயர் ஆற்றினாள் எனவும் கூறி, நல்லவன் அல்லாத மகனைப் பழித்துள்ளார் சீத்தலைச் சாத்தனார். ...' . பழியொடு பட ராமை மட்டுமன்று; புகழொடு பொலிந்தவன் மகன் ஆதல் கண்டு தன் மகன் எனப் 7