பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமை கொள்வாள் தாய் என்பதை உணர்த்த 'தன்' என்பது இன்றியமையாது இடப்பட வேண்டியதாயிற்று. மேலும், பெற்ற தாயைப் பேணி வளர்க்கும் மகனும் உலகில் உள்ளான். பெற்ற தாய் மடிப்பிச்சை எடுக்க பிறிதோரிடத்தில் பெருக வாழும் மகனும் உள்ளான். இந்த மகன், பின்னவன் போன்றவன் அல்லன், மாறாக முன்னவன் போன்றவன் என்பதை உணர்த்தவும் 'தன்' என்பது தேவைப்பட்டது. மகன் : மேலே கூறிய அனைத்துப் பண்புகளும்-மகளுக்கும் பொருந்தாவோ? ஏன் மகளைக் கூறாது மகனைக் கூறினார்? மகனுக்கு நிகராக வளர்க்கப்பட்டாலும் பருவம் வந்துற்றதும் தக்கான் ஒருவனைத் தேடி அவ னுக்கு மணம் செய்து கொடுத்து அவனோடு அவன் மனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியவள் மகள். பெற்றோர் அனுப்பி வைக்கவில்லை என்றால், தக் கான் ஒருவனைத் தானே தேர்ந்து கொண்டு அவன் மனை சென்று வாழவேண்டியவள். மகள் பிறந்த மனணில் நெடிது நாள் இருக்கத்தக்கவள் அல்லள். புகுந்த வீட்டில் அவள் நடத்தும் வாழ்க்கை முறையால் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டியவள். பல்லாற்றாலும் மனந்தரும் சந்தன மரம். அதை அரைத்துச் சந்தனக் குழம்பாக்கித் தம் மெய்யில் பூசிப் பயன் படுத்திக் கொள்வார்க்கல்லாது, அது மலையி டத்தே முளையிட்டு வளர்ந்தாலும் அது அம்மலைக்கு எவ்விதப் பயனையும் தராது. - தலையாய சிறப்பு வாய்ந்த வெண்முத்துக்கள்; அவற்றை அணியாக்கி அணிந்து கொள்வார்க்குப் பயன் 8