பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுவதல்லது, அவை கடலிடையே பிறப்பினும், அக் கடலுக்கு எவ்விதப் பயனையும் தருவது இல்லை. ஏழு நரம்புகளையும் கூட்டிய வழி எழும் இனிய இசை, பாடுவோர்க்கும், அவ்விசையினைக் கேட் பார்க்கும் பயன் படுவதல்லது அவ்விசை யாழினிடையே பிறக்கினும், அந்த யாழுக்கு யாதொரு பயனையும் அளிப்பதில்லை. சந்தனமும், முத்தும், இசையும் போன்றவள்தான் மகள்; புகுந்த வீட்டாருக்கு பயன்படுவதல்லது பிறந்த வீட்டாருக்குப் பயன்படப் பண்ணுவது முறையாகாது என்கிறார், பாலை பாடிய பெருங்கடுங்கோ, ஆகவே தான் மகளைக் கூறாது மகனைக் கூறினார் வள்ளுவர். சான்றோன் : முடியாட்சிக் காலமாயின் வேந்தருள் வேந்தன்; குடியாட்சி காலமாயின் குடியரசுத் தலைவர்; பெரு நாட்டின்பிரதம அமைச்சர்; மாநிலமாயின் முதலமைச்சர்; பல்கலைக்கழகத் துணைவேந்தர்; தலைமை பேராசிரியர், சிறந்த மருத்துவர், சிறந்த பொருளாளர், சிறந்த வணிகர், சிறந்த தொழிலதிபர், பெருநிலக்கிழார், சிறந்த நடிகர், சிறந்த ஆட்டக்காரர் எனப் பலநிலைப் பெரியார்கள் எல்லாம் இருக்கவும், அவர்களை விடுத்துத் தன் மகனைச் சான்றோனாம் நிலையில் வைத்தமைக்கு யாது காரணம்? ஒரு நாட்டிற்கு இவர்கள் எல்லாம் தேவை என்றாலும் இவர்களைப் பெற்று விட்டதால் மட்டுமே ஒரு நாடு நாடாகிவிடாது. எவ்வழி நல்லவர் ஆடவர் ; அவ்வழி நல்லை : வாழிய நிலனே' (புறம் : 187) என்ற ர் 9.