பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் ஒரு நாட்டிற்குப் படை வேண்டும். பசியாற உண்ண உணவு வேண்டும். பல்வேறு அணிகலன் அளிக்கும் பொருள் வளம் வேண்டும். ஆனால் இவை மட்டும் போதா, அந்நாட்டில் சான்றோர்களும் இருத்தல் வேண்டுவது இன்றியமையாதது. அரசர் முதல், ஆட்டக்காரன் வரையான பல்நிலை பெரியார்களாக அவர்கள் இருக்கலாம். ஆனால் அவர்களை எல்லாம் மக்கட்டன்மை யுடையவர் எனக் கொண்டு விட முடியாது; 'மக்களே போல்வர் கயவர்" (குறள். 1071) என்றார் வள்ளுவர். அதனால் உருவ ஒற்றுமையை மட்டும் கொண்டு ஒருவரை மக்கள் தன்மை வாய்ந்தவர் எனக்கொண்டு விடமுடியாது; மக்கட்டன் மையாலும் அவர்களும் நிரம்பியவராதல் வேண்டும் அப்போதுதான் அவர்கள் மக்களாகக் கருதப்படுவர். 'உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று; வெறுத்தக்க பண்பு ஒத்தல் ஒப்பதாம் ஒப்பு” என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாறெல்லாம் பெருமைப்படுத்தப்படும் அச் சான்றோர்களின் பண்புதான் என்ன? சான்றாண்மைக் குரிய பண்புகள்தாம் யாவை? சுற்றத்தார் போலும் மக்கள் மட்டுமில்லாமல், உலகிலுள்ள எல்லா உயிர்களிடத்தும் அன்புகாட்டல், பழிபாவங்களுக்கு அஞ்சல், எல் லோர்க்கும், எந்நேரத்திலும் அவர் வி ரு ம் பு வ ன கொடுத்து, உறுதுணையாய் நிற்றல், நண்பர், உறவினர் போல்வாரிடத்தில் சிறிதே கண்ணோட்டம் உடையராதல் எந்நிலையிலும், தீமையிலா வாய்மையே பேசுதல் இவையே சான்றாண்மை என்ற மாளிகையைத் தாங்கி நிற்கும் துண்கள் என்கிறார் வள்ளுவர்.

  • அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம்
  • . - வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய துண் " (குறள்: 1983) 10