பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் மகன் சான்றோன் என்றதும், அவன்பால் இத்தனை பண்புகளுமே பொருந்தி, நிறைந்துவழிகின்றன என எண்ணி எந்தத் தாய்தான், மகிழ்ந்து இறும்பூது எய்தாதிருப்பாள்? - மகன் சான்றோன் என்றதும், அத்தாய்க்கு மன நிறைவு, மன மகிழ்ச்சி தருவது பிறிதொன்றும் உளது. மகன் தானே சான்றோனாக ஆகிவிடல் இயலாது. அவனை ஒருவர் சா ன் ேற | ன க ஆக்கி இருக்க வேண்டும்; அந்த ஒருவர் யார்? அக்கடனை யார்பால் ஒப்படைத்திருக்கிறது இவ்வுலகம்? மகனை ஈன்று, அவன் உடலைப் பேணி வளர்த்துத் தன் கடமையைக் குறைவற முடித்த மனநிறைவில், பொன்முடியார் கூறு கிறார். ' சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடன் ' (புறம் 312) என்று மகனைச் சான்றோன் ஆக்க, தந்தை படாத பாடு படவேண்டும். பள்ளியில் விடுத்து படிப் பறிவு கொடுத்தல் முதல், பண்புகளைப் புகட்டும் வகை யான பல்வேறு கடமைகளைத் தந்தை குறைவற நிறை வேற்றினால்தான், மகன் சான்றோன். ஆதல் இயலும் அதில் அவன் சிறிது தவறினாலும் துள்ளித் திரிகிற காலத்து என் துடுக்கு அடக்கிப் பள்ளிக்கு வைத்திலனே என் தந்தையான பாதகனே " என அவன் மகனே அவனைப் பழிப்பான். ஆக, மகன் சான்றோன் என் றதும், 'ஈன்று புறந்தந்தது மட்டுமே நான் செய்தது.1 அவனைச் சான்றோன் ஆக்கியவர் என் கணவர், என மன நிறைவு எமு, கடமை ஆற்றிய கணவனை நினை வூட்டும் விதம் அச்சான்றோன் என்ற சொல்தான்! என : என்று சொல்ல, என்று புகழ, என்றெல்லாம் கொள் ளலாம் ; இதற்கு வினைமுதல் இல்லை. சான்றோன் என்று சொன்னவர் யார்? விடை இல்லை. சொன்ன 11