பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டது. அக்காட்சியை காண முடியாது. காதும் சரியாகக் கேட்கவில்லை. ஆக வீட்டோடு, படுத்தப் படுக்கையாக வீழ்ந்து கிடக்கிறாள். இந்நிலையில் சிலர் வந்து அவள் மகனின் சாண்றான்மையின் பெருமையை அவள்காது கேட்க உரத்த குரலில் கூறினார்கள்; அது கேட்ட அந்நிலையில் அவள் உடலில் புதுத்தெம்பு பிறந்து விட்டது. மகனைப் பெற்ற இளமைத் துடிப்பு உண்டாகி விட்டது. மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டாள் அத்தாய். இது அண்ணா அவர்கள் அளித்த விளக்கம். தாய் : மகனைச் சான்றோன் எனப் பிறர் புகழக் கேட்ட தந்தைக்கு மகிழ்ச்சி வராதா ? தாய்க்கு மட்டும்தான் மகிழ்ச்சி வருமா? தந்தைக்கும் வரும், ஆனால் அவன் மகிழ்வதில், அத்தந்தைக்குப் பெருமை இல்லை. காரணம் மகனைச் சான்றோன் ஆக்கியதே அவன்தான். ஆக, தன் கடமை கண்டு தானே மகிழ்வது பண்பாகாது. ஆகவேதான் தந்தை மகிழவிடவில்லை வள்ளுவர்; அம் மகிழ்ச்சியைத் தாய்க்கே உரிமையாக்கி உயர்ந்துவிட்டார் வள்ளுவர். - 13