பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி ஆ. சூழ்நிலை வள்ளுவர் சொல்லாடல் மாட்சி, இன்ன இடத்திற்கு இன்ன சொல்லைத்தான் போடவேண்டும் எனத் தேர்ந்து போடுவதோடு நின்றுவிடாது. அவர் சொல்லாடல் நிலைக்கு மேலுமோரு பெருமையும் உண்டு. வடதுருவத்தை யும், தென்துருவத்தையும் மோத வி டு வ து ேப ா ல் சொற்பொருட்களை மோதவிடுவார். வடதுருவத்திற்குச் செல்வார். ம று க ண .ே ம தென் துருவத்திற்குத் திரும்பிவிடுவார். வேண்டத்தகாத் ஒன்றை, வேண்டத்தக்கதாகக் கொள்ளும் வித்தகச் செல்லாடர் அவர். 1) கொல்வதுபோலும் கொடுமை ("கொன்றன்ன இன்னா' 109) என்றும், சாதலைக் காட்டிலும் கொடுமை வேறு இல்லை ('சாதலின் இன்னாதது இல்லை’ 260) என்றும், கொல்வதுபோன்ற வறுமை ('கொன்றதுபோலும் நிரப்பு’’ 1048) என்றும், கொலையைக் கா ட் டி லு ம் கொடியவர், ('கொலையிற் கொடியர்’ 550) என்றும் கூறி, கொலை, அதன்பயனாம் சாவு ஆகியவற்றின் கொடுமைகளை வேறு இடங்களில் விளங்கக் கூறியிருக்கும் வள்ளுவர், "சாவு ஆக்கம் தரும் (183); சாதல் இனிது (230); சாவு இரந்தாவது பெறத்தக்கது (780); வாழ்தலைக் காட்டிலும் சாதல் நன்று (967) என்றும் கூறியுள்ளார். எந்தச் சூழ்நிலை, அவரை அவ்வாறு கூறச்செய்தது? ஏன் அவர் அவ்வாறு கூறியுள்ளார் என்பதை ஆராய்ந்து பார்க்கின், அவர் செல்லாடல் மா ட் சி க் கு விளக்கம் கிடைக்கும். 14