பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்தலின் சாதல் ஆக்கம் தரும்; யாருக்கு? இதோ விடை: ஒருவரைக் காணாதபோது, அவரைப்பற்றி எவ்வளவு இ | வ ர ன கருத்துக்களைக் கூறலாமோ, அவ்வளவும் கூறிவிட்டு, அவரை நேரில் கண்டபோது, எவ்வளவு அதிகமாகப் புகழலாமோ அவ்வளவு புகழ் உரைகளை வழங்கி, அதுகேட்கும் அவ்வப்பாவி, அப்புகழ் உரைகள், அவன் உளமார உரைத்த உ ை க ள் என நம்பி மகிழ்ந்து, அம்மகிழ்ச்சி மிகுதியால் வாரிவழங்கும் பொருள் வளத்தால் வாழ்பவன் ஒருவன் அவ்வாறு, கானா வழிப பழிக்கவும், கண்டவழிப் புகழவும் அறியாமையால், வாழ் தற்கேற்ற வளம் காணாது இறந்துபோகிறான் மற் றொருவன். இவ்விருவரையும் உலகம்,முன்னவனைப் பழிக்க, பின்னவனைப் புகழும். அப்புகழ் உரைகள், உலகுள்ள அளவும் நின்று நிலைபெறும். அதுவே அவனது ஆக்கம். இந்தச் சூழ்நிலையில்தான் அவ்வாறு கூறியுள்ளார். 'புறங் கூறிப் பொய்த்து உயிரி வாழ்தலின், சாதல், அறம் கூறும் ஆக்கம் தரும் (183) புறங்கூறி வாழ்தலின் இழிவை விளக்க, வள்ளுவர் சாவுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டியதாயிற்று. 2) வறுமையால் வாடி, தன்பால் வந்து பொருள் வேண்டி நிற்பார்க்கு, அவர்க்குத் தேவைப்படுவன வழங்க லும், அவ்வாறு வழங்குவதால் புகழினைப் பெறுதலுமே வாழ்வாம். அவையே உயிர்க்குச் செல்வமாம்; இவை இல்லையேல் உயிர்க்கு வாழ்வு இல்லை. 'ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” (231) உயிரின் வாழ்வு, ஈதலாம் புகழில் நிற்பதாக, தன்பால் வந்து இரப்பார்க்குக் கொடுத்து உதவ இல்லாமையே ஒருவன் நிலையாயின், அந்நிலையில் வாழ்ந்து, அதையே எண்ணி loš