பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணித் துயர் உறுவதைக்காட்டிலும், இறந்துபோவதால் அத்துயர் இல்லாமை மட்டும் அன்று; இனிமையும் பயக்கும். ஆக, ஈயமாட்டா இழிநிலையை விளக்க வள்ளுவர் சாவுக்கு வரவேற்பு கொடுக்க நேர்ந்தது;

  • சாதலின் இன்னாதது இல்லை; இனிது அது உம்

ஈதல் இயை யாக்கடை" (230) 3) மகனைப் பெற்றுப் பெரியவனாக்கி விடல் தாய்க்குக் கடன்; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடன்: நல்லவன் ஆக்குதல் நாடாள்வான் கடன்; களத்தில் தன் உயிர் விட்டாவது வெற்றிகண்டு கடனை நிறைவேற்றல் மகன் 高影。获打。 'ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே: சான்றோள் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக்கடனே. ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.” . - (புறம் 312) அக்கடனாற்றிக் களத்தில் உயிர்நீத்த ஒருவனுக்கு, அவன் தாய் உள்ளிட்ட பலரும் கண்ணிர் சொரிந்து; துன்பக் கண்ணிர் அன்று; இன்பக் கண்ணிர்; பாராட்டுவர். (சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே ('புறம் 277). சிறுவன். சிதைந்து வேறு ஆகிய மகன் கிடக்கைகான ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே '(புறம் 278) x 16