பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன் ஆற்றி புகழ் சேறல் க ள .ெ வ ற் றி ஒன்றால் மட்டுமே கிட்டும் என்றநிலை இருந்த காலத்துக் கூற்று இது! உலகம்பெரிது; ஆற்றவேண்டிய கடன்களும் பலப்பல; எண்ணியாதன; அத்தகு கடன்களை ஆற்றுபவர் அனைவர்க்கும், அவனை ஆளாக்கியதாய் உள்ளிட்ட அனைவரும், அவன் புகழ் நிலைகேட்டு இன்பக் கண்ணிர் சொரிவர்; அதுவே அவன் வாழ்வின் பயன்; நிலையாஉலகத்து அவனின் புகழ் அல்லது நிலைத்து நிற்பது வேறு இல்லை, ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் பொன்றாது நிற்பதொன்றில் (குறள் 233) என்று கூறியவர் வள்ளுவர். ஆகவேதான், அத்தைகையசாவு அவனுக்குத் தானே வந்து வாய்க்காதாயின், அவன் அதை யாசித்தாவது பெறுதல் வேண்டும்; அது பெறுவதன் மூலம், வாழ்வில் நிலைபேறுடைய பேறுபெறுதல் வேண்டும் என்றார். - "புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின், சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து" (780) 4) 'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' இது வாழ்க்கைச் சட்டம்; முயன்று ஈட்டிய பொருள்களைத் தனக் கெனவே வைத்துக்கொள்ளாது, தக்கார்க்குக் கொடுக்கவும் வேண்டும். பெருஞ்செல்வன்: காவல் அற்று ஊர்நடுவே உள்ள உண்ணு நீர் நிறைந்த குளம் போலவும், உண்டற்கு இனிய பழங்கள் நிறைந்த மரம்போலவும் வாழவேண்டும், அதுவே வாழ்வின் பயன்: அவ்வாழ்வின் பயனைப் பெறுவதற்காக, அவ்வாறு உபகாரம் செய்வதால், க்ேடு வந்துறும் என்றால், அக்கேட்டினைத் தன்னைப் பிறர்க்கு விற்றாவது(அரிச்சந்திரன்போல) பெறுதல்வேண்டும் என்றார் வள்ளுவர். கேட்டினைப் பெறுதல் அறவுடைமையன்று: -2- 17