பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிலும் தன்னை விற்றுக் கேட்டினைப் பெறுதல் அறவே அறிவுடைமையன்று என்பது உண்மை. இதை அறியாதவர் அல்லர் வள்ளுவர்; ஆயினும் மேலே விளங்கிய உலகியல் உணர்ந்தவர் அவர், ஆகவேதான், கேடு பெற்றுக் கொள்ளத்தக்கது என்றார். "ஒப்புரவி னால் வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தத்க துடைத்து’’ (220) 5) கல்லாதவர், பொல்லாதவர்; ஆனால் நல்லவர் என்கிறார் வள்ளுவர்; அ தி ல் த ன் இருக்கிறது அவர் சொல்லாடலின் வல்லமை, எந்தச் சூழ்நிலையில் கல்லாதவரை நல்லவர் என்கிறார்? அவன் கல்லாதவன்; கற்றவர்கூடிய அவையுள் காலடிஇடவும் தகுதியில்லாதவன்; அத்தகையான்; அவ்வவையுள்ளும் நுழைந்து; ஆங்குச் சொல்லக் கூடாத வற்றையெல்லாம் சொல்லி அவற்றையும் சொல்லவேண்டிய முறை அறியாமல், முறையில்லா முறையில்சொல்லி, அவர் இடையே ஒரு கேலிப்பொருளாக நிற்பதைக் காட்டிலும், 'அவை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் நன்மரம்' என்பதுபோலும் பழிபெறுவதைக்காட்டிலும்,வாய்மூடி மெளனி யாக இருந்துவிடுவானாயின்; அவனேநல்லவன்; இந்தச்சூழ் நிலையில்தான் கல்லாதவனும் நல்லவன் என்றார். 'கல்லா தவரும் நனிநல்லார் கற்றார்முன் - சொல்லா திருக்கப் பெறின்' (403) 6) "ஆக்கம் ஏமாப்பு உடைத்து' (112), 'ஆக்கம் பெரிது’ (328), "ஆக்கம் பலவும் தரும்' (462, 522), ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் (584) என்றெல்லாம் பாடி ஆக்கத்தின் சிறப்பையும், 'நல்குரவு, தொல்வரவும், தோலும் கெடுக்கும்’ (1043), 'நல்குரவு என்னும் இடும்பை' (1045), நல்குரவு ஈன்ற தாயானும் பிறன்போல நோக்க 18