பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படும்' (1047), என்றெல்லாம் பாடி, நல்குரவின் இழிவையும் எடுத்துக்காட்டியவர் வ ள் ளு வ ர். அந்த வள்ளுவர் கூறுகிறார். "ஆக்கத்தைக் காட்டிலும் நல்குரவே தலையாயது. என்று, அதிலேதான் இருக்கிறது, அவர் சொல்லாடலின் வித்தகம். ஆக்கத்தைவிட நல்குர்வே தலை என்று கூறிவிட வில்லை; ஆக்கத்திற்குச் சில அடைமொழிகளையும், அதே போல், நல்குரவிற்குச் சில அடைமொழிகளையும் கொடுத்தே கூறியுள்ளார்; எந்த ஆக்கம்? பழியொடு வந்த ஆக்கம். சிறுபழியொடு அன்று; மிக்க பழியொடு வந்த ஆக்கம், நல்குரவு, யார்பால் உள்ள நல்குரவு! பழிக்கு அஞ்சும் சான்றோர்.பால் உள்ள நல்குரவு; வெறும் வறுமை அன்று; மிக்க வறுமை. இப்போது புரியும் அவர் உட்கருத்து; நல்லவர் பழியொடுவரும் ஆக்கத்தை விரும்புதல் கூடாது. அப்பழிபடுசெய்ல் செய்யாமையால் வறுமைதான் மிஞ்சும் என்றால்; அதுவே வரவேற்கத்தக்கது, என்று கூறுவதன் மூலம் பழியஞ்சல் பெருமையைக் கூறியுள்ளார் வள்ளுவர். "பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை’’ r (657) 7) பகையரசர்மீது படைதொடுத்துச் செல் லும் வேந்தன்பால், வறுமை இல்லையாயின், செல்லும் இடத்தில் அவன் படைவெல்லும் ("வறுமையும் இல்லாயின் வெல்லும் படை 408 ), சூதாட்டத்தைக் காட்டிலும் ஒருவனுக்கு வறுமையினைத்தரக் கூடியது வேறு ஒன்று இல்லை.("சூதின் வறுமை தருவது ஒன்று இல்’ (934), அழியா வறுமை அறி வி ைன அழித்துவிடும்' ('அறிவின்ை நிச்ச நிரப்பு கொன்றாங்கு' 532 ), கொல்வதுபோலும் கொடுமை வாய்ந்தது வறுமை, ("கொன்றது போலும் நிரப்பு' 1048) 19”