பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என வறுமையின் கொடுமையையும், ஒரு பொருளாக மதிக்கத் தகாதவனையும் மதிக்கச் செய்யும் மாண்புடையது செல்வம், ( பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்' 751 ), செல்வம் உடையவர்களை எல்லோரும் சிறப்பு செய்வர். ('செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு 752) . பொருள் அறம் தரும்; இன்பமும் தரும் ('அறன் ஈனும், இன்பமும் ஈனும், திறன் அறிந்து தீதின்றி வந்த பொருள்' 754). எனச் செல்வத்தின் சிறப்பையும் வாயாரப் புகழ்ந்தவர் வள்ளுவர். அந்த வ ள் ளு வர் கூறுகிறார், வறுமையைவிடக் கொடியது செல்வம் என்று. எந்த வறுமை? எந்த செல்வம்? வினாவை எழுப்புங்கள், வி ள க் க ம் கிடைக்கும் அவர் கூற்றிற்கு நல்லவர்கள்பால் வறுமை சேர்ந்து விட்டால், அது அவர்களை மட்டும் வருத்தும், வறுமை காரணமாக அந்த நல்லவர், பிறர்க்கு ஏதும் கேடுசெய்யார்; ஆகவே, அந்த வறுமையால் கேடு இல்லை; ஆனால் கல்லாதவன் ஒருவன், நல்லது, தீது தெரியாதவன் ஒருவன்; அவன்பால் செல்வம் கொழித்து விட்டால், அச்செல்வத்தின் துணை கொண்டே செய்யக் கூடாதன எல்லாம் செய்வன். அவன் கொடுஞ் செயலுக்கெல்லாம் துணைபோகும் அச்செல்வம். இப்போது கூறுங்கள். நல்லார் கண் உள்ள வ று ைம கொடியதா? கல்லாதான்பால் உள்ள செல்வம் கொடியதா? அச்செல்வந்தான் கொடிது உறுதியாக. ஆகவேதான் கூறினார் வள்ளுவர்.வறுமையின் செல்வம் இன்னாது என்று அதுதான் வள்ளுவர் சொல்லாடல் திறன், - 'நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே - கல்லார்கண் பட்ட திரு' . (408) 20