பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி இ. கேள்விக்கணை. திருவள்ளுவர் சொல்லாடல் மாட்சியின் பிறிதொருவகை, கேள்விக்கணைகளைத் தொகுத்தல், வருவாய? என்ற கேள்விக்கு, வருவேன்' என்ற விடையைக் காட்டிலும், வாராது இருப்பேனா'? என்ற எதிர் கேள்வி கேட்பதன் மூலம், அளிக்கும் விடையில், பொருள் அழுத்தம் ஏற்படுகிறது. வினாவுக்கு விடையாக, எ தி ர் வி னா தொடுக்கும் இம்முறையைத் தொல்காப்பியமும் ஏற்றுக் கொள்கிறது. 'வினாவும் செய்ய வினா எதிர் வரினே' என்பது தொல்காப்பியம். (தொல்: சொல்.14) வினாவுக்கு விடையாக, ஒரு வினாவைத் தொடுக்கும் இம்முறையினை வள்ளு வ ர் நாற்பது இடங்களில் நன்கு தேர்ந்து ஆண்டுள்ளார். அவற்றுள் ஒரு சில காண்போம். ஐயம்திரிபு அறக்கற்ற பெரியவர்களின் கால்களில் வீழ்ந்து வணங்குவது, கல்வி கற்றதன் பயன் ஆகும். உண்மை நிலை அதுவாகவும், க ற் றி ரு ந் தும், கற்றறிந்த பெரியவர்களின் காலில் வீழ்ந்து வணங்காராயின், அக்கல்வி கற்றதனால் பயன் இல்லை என்ற உண்மை நிலையை வற்புறுத்திக்கூற எண்ணிய வள்ளுவர், பெரியவர்களின் தாளை வணங்காராயின், அவ்வணங்காதார் கற்ற கல்வியால் யாது பயன்? என்ற கேள்வியைத் தொடுத்துள்ளார். கற்றதன்ால் શળ பயன்ான்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்' (குறள்:2) 21.