பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவனுக்கு, அ ற ச் செ ய ல், புகழையும் தரும்: செல்வத்தையும் தரும். ஆதலில், அறத்தைக் காட்டிலும், அவனுக்கு ஆக்கம் அளிப்பது வேறு எதுவும் இல்லை. இப்பொருளை வற்புறுத்திக் கூறவிரும்பிய வள்ளுவர், அறத்தைக் காட்டிலும் மேம்பட்ட ஆக்கம் வேறு இல்லை எனக் கூறுவதற்குப் பதிலாக, அறத்தைக் காட்டிலும் மேலான ஆக்கம் எது இருக்கிறது எனக்கேட்டு வைத்துள்ளார். "சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு? (குறள்:31) வாழ்க்கை குறித்த அறநூல்கள் கூறியமுறைப்படி, ஒருவன், இல் வாழ்க்கையை நடத்தி வருவனாயின், அவன் இவ்வுலக இன்பம், மறுஉலக இன்பம் ஆகிய எல்லா இன்பங்களையும் பெற்றுவிடுவான். ஆகவே, அவன் இல்லறத்தை விடுத்துத் துறவறம் மேற்கொண்டு தவம் செய்து அடையக்கூடிய இன்பம் எதுவும் இல்லை. ஆகவே அது தேவையும் இல்லை. p இல்வாழ்க்கை தத்துவத்தை வற்புறுத் தி வகுத்துத்தர எண்ணிய வள்ளுவர், துறவறத்தில் போய்ப்பெறக்கூடியது எதுவும் இல்லையென உடன்பாட்டு நிலையில் கூறாமல், போய்ப்பெறக்கூடியது என்ன இருக்கிறது? என வினா எழுப்பி விடுத்துள்ளார். 'அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்?' (குறள்: 46). மனைவி, மாண்புடையளாகி விட்டால், அத்தகையாளை மனைவியாகப் பெற்றவனிடத்தில், இல்லாத செல்வமே இல்லை. எல்லாச் செல்வமும் வந்து குவிந்து விடும். அதற்கு மாறாக இல்லற மாண்பிலா ஒருத்தியை ஒருவன்மனைவி 22.