பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாகப் பெற்றுவிடுவானாயின், அவனிடத்தில், அவள் வருவதற்கு முன்னர்க் குவிந்துகிடந்த செல்வக்குவியல் அனைத்தும் குறைந்துபோக, ஏதும் இல்லாதவன் ஆகி விடுவன். இல்லற வாழ்வின் இந்த உயிர்நிலையை உணர்த்த விரும்பிய வள்ளுவர், மனைவி ந ல் ல வ ள் அல்லளாயின், ஏதும் இருக்காது; உள்ளதும் போய்விடும் என்றும் உடன்பாட்டு வாய்ப்பாட்டால் கூறாமல், இல்லாதது எது? என்றும், உள்ளது எது? என்றும் வினா எழுப்பியதன் மூலம், உணர்த்த விரும்பிய பொருளை அழுத்தமுற உணர்த்தியுள்ளார். 'இல்லதுஎன், இல்லவள் மாண்பு.ஆனாள்? உள்ளதுஎன், இல்லவள் மாணாக் கடை? (குறள் 53) மக்களாகப் பிறந்து ஒவ்வொருவரும் பிற உயிர்களிடம் அன்பாய் இருத்தல் பொருட்டே, உயிர் உடலோடு தொடர்பு கொண்டுள்ளது. . 'அன்போடு இயைந்த வழக்குஎன்ப, ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு’’ (குறள்-73) என்றும், அன்பின்வழி நின்ற உடலே உயிரோடு கூடிய உடலாகும். அன்பின் வழிச் செல்லாதவருடைய உடல் உயிாேடு கூடிய உடலன்று; அதுவெறும் தோல்போர்த்த எலும்புக்கூடாகும், 'அன்பின் வழியது உயிர்நிலை; அஃது இலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு” (குறள் 80)என்றும், கூறி, அன்பின் பெருமையை, இன்றி அமையாமை விளக்கியும் வள்ளுவர்க்கு, மனநிறைவு உண்டாகவில்ல்ை அன்பின் பெருமையை மேலும் வற்புறுத்திக் கூறி விரும்பினார். - 23