பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் எல்லோருமே, குணமும் குற்றமும் உடையர் ஆகவே, பிறர் பால் உள்ள குற்றங்களைக் கண்டு அவற்றைப் பிறர் எல்லார் முன்னும் எடுத்து உரைத்து பழிக்கும் குணம் உடையான் ஒருவன். அவ்வாறு பழிப்பதற்கு மு ன் ன ர் ச் , சிறிதே, சிந்தித்துத் தன்பால் உள்ள கு ற் ற ங் க ைள யு ம் ஆராய்ந்து பார்க்கின், அவன் பிறர் குற்றம்கண்டு பழிப்பது செய்யான் ஆகவே, பிறரைப் பழிக்க, அதுகேட்ட அவர், அவன்பால் சினம்கொண்டு தாக்கல் போலும் கேடுகள் சிலவாகும், இந்த அரிய அறவுரையை உணர்த்த விரும்பிய வள்ளுவர், அவ்வாறு நடந்து கொண்டால் தீது இராது என உடன்பாட்டு நிலையில் கூறினால் பெருள் சிறக்காது என உணர்ந்து, அவ்வாறு நடந்து கொண்டால், யார்க்கேனும் ஏதேனும் கேடு உண்டாகுமா? என வினா விடுத்துள்ளார். "ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு? ' (குறள்: 190) - அறிவுடைமையின் பெருமையை விளக்க ஒரு தனி அதிகாரமே ஒதுக்கி, இறுதியாக, 'அறிவுடையார் எல்லாம் உடையார்,, எனக் கூறிய திருவள்ளுவரே, அவ்வறிவினால் ஏதேனும் பயன் உண்டோ?’ என்ற கேள்வியைக் கேட்டு வைத்துள்ளனர். தனக்கென வாழாது, பிறர்க்கென வாழ்தலே வாழ்க்கை. அவ்வாறு வாழ்வாரே பெரியார். "தமக்னெமுயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையால்தாள், உலகம் உண்டு - என்றார். கட லு ள் மா ய் ந் த இளம்பெருவழுதியார் - (புறம்:182) 'தனக்கென் வாழாப் பிறர்க்கு உரியாளன்' என்பது அகநானூறு. (54); , பிறர்க்கு அறம்முயலும் பெரியோன்;' 25