பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி FF, 2–6)l60)LD திருவள்ளுவர் சொல்லாட்சியின் மாட்சியில் பிறதொரு வகை,ஒர் அறவுரையினையே,மற்றோர் அறவுரைக்கு உவமை ஆக்குதல். அதாவது எல்லார்க்கும் தெரிந்த அறத்தைத் தெரியாத அறத்திற்கு உவகை ஆக்குதல். சில காண்போம். பிறர்பால் உள்ள, பெருங்கல்வி, பெருஞ்செல்வம், பெரும் புகழ் காண்பான் ஒருவன். அவற்றைத் தானும் அடையவேண்டும் என முயற்சிக்கலாமே ஒழிய, பொறாமை கொள்ளுதல் கூடாது. மாறாகப் பொறாமை கொண்டு விட்டால், அது அவன் பால் வெறுப்பையும், பகையையும் உண்டாக்க, இறுதியில் அவன் அழிவிற்கு வழிகோலிவிடும்; அவன்பால் இருந்த செல்வமும் இல்லாமல் போய்விடும் அவனைத் தீயவழிகளில் செல்லவும் துணைபோய்விடும். 'அழுக்காறு என ஒருபாவி, திருச்செற்றுத் - தீயுழி உய்த்து விடும்” என்பது குறள் (168). இது எல்லார்க்கும் தெரிந்தஒன்று: கண்ணுக்குப் புலப்படக்கூடியது, அதேபோல், த ல் லெ ழு க் கம். இதுஉடையானுக்கு உயர்வினைத்தரும். அத்தகு ஒழுக்கம் ஒருவள்பால் இல்லாது - போயின், அவன் இழிந்தவன் ஆவன்; பழி அவனை வந்து சேர்ந்து விடும். தீய செயல்களில் அவனைக் கொண்டுபோய் விட்டுவிடும். அவன் வாழ்க்கையில் அந்நிலையில் தாழ்வு உண்டாகுமே அல்லது உயர்வு உண்டாகாது. இந்த உண்மையை உலகத்தவர்க்கு உணர்த்த விரும்பிய 27