பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர்க்குக் கிடைத்த உவமை, பொறாமை உடை யான்பால் உள்ள வறுமை; செல்வம் இல்லாமை, ஒழுக்கம் இல்லாதான்பால் உயர்வு இன்மைக்கு உவமை ஆக்கி விட்டார். - 'அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை. ஒழுக்கம் இலான்கண் உயர்வு' (குறள்: 135) பொருள் தேடலாம் வழிகளை மேன்மேலும் உருவாக்க வேண்டும். அவ்வாறுகண்ட வழிகளில் சென்று பொருளைச் சேர்க்க வேண்டும்; சேர்த்த பொருளைப் பிறர் கவர்ந்து செல்லாவாறு காத்தல் வேண்டும்: அவ்வகையால் குவியும் செல்வத்தை இ ன் ள த ற் கு இவ்வளவு; இன்னார்க்கு இவ்வளவு என்ப்பகிர்ந்து அளிக்க வேண்டும். இவ்வகையில் செயல்படுவார் இடத்திலேயே செல்வம் அழியாது நிற்கும். இவ்வழிகளைப் பின்பற்றாதாள்பால், பண்டே செல்வம் குவிந்துகிடப்பினும், அது நாளடைவில், சிறுகச்சிறுகக் குறைந்து கொண்டே வந்து இறுதியில் இல்லாமல் போய்விடும். . இது எ ல் லார் க் கும் தெரிந்த ஒன்று: ஆனால் தன் உறவினர் அல்லாதார் இடத்தும். மக்கள் உயிர் அல்லாத ஏனைய உயிர்களிடத்தும் அன்பு காட்டுவதாம் அருள் என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒன்று. பொருள், நல்லவர் இடத்து மட்டுமே அல்லாது, நல்லவர் அல்லாதவர் இடத்தும் குவிந்து கிடக்கும்; ஆனால் அருள் நல்லவர் இடத்து மட்டுமே இடம் பெற்றிருக்கும். பொருள் இன்றி வறுமையில்வாடும் ஒருவன், பிறிதொருகாலத்தில் கொழுத்த செல்வம் உடையவன் ஆகவும் கூடும். ஆனால், முன்பு அன்புடையவராக இருந்த ஒருவர். யாதோ ஒரு காரணத்தால் அந்த அருளை முறத்துவிடுவராயின் அந்த அருளை மீண்டும் 28